
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 235 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா சதமடித்து 100, ருதுராஜ் 77*, ரிங்கு சிங் 48* ரன்கள் எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து 235 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முடியாமல் 18.4 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக வேஸ்லி 43, லுக் ஜோங்வே 33 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஆவேஸ் கான் மற்றும் முகேஷ் குமார் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
சாம்பியன் போல இந்தியா:
அதனால் முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்த இந்தியா 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத ஜிம்பாப்வே அணியிடம் முதல் போட்டியில் இந்தியா தோற்றது. ஆனால் இப்போட்டியில் அதே இளம் வீரர்கள் ஜிம்பாப்வே அணியை அடித்து நொறுக்கி இந்தியாவை சாம்பியன் என்பதை நிரூபிக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த போட்டியில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து உலக சாம்பியனை போல் விளையாடி இப்போட்டியில் இந்தியா வென்றுள்ளதாக ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா பாராட்டியுள்ளார். அத்துடன் அபிஷேக் சர்மா ஆரம்பத்திலேயே கொடுத்த கேட்சை தவறி விட்டது தோல்விக்கு காரணமானதாகவும் அவர் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
அதே போல பேட்டிங்கில் டாப் ஆர்டர் அதிரடியாக விளையாடாதது தோல்வியை கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “உலகச் சாம்பியன் உலக சாம்பியன் போல் விளையாடியது. கேட்ச்களை தவற விட்டது இன்று எங்களுக்கு வேதனையை கொடுத்தது. இந்த பிட்ச்சில் 200 ரன்கள் அடிக்க முடியும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் இந்தியா அதையும் தாண்டி 30 ரன்கள் எக்ஸ்ட்ராவாக எடுத்தது”
இதையும் படிங்க: அவர் தான் அடின்னு சொன்னாரு.. எதிரணி இதை செஞ்சா அடிச்சு நொறுக்குவேன்.. ஆட்டநாயகன் அபிஷேக் பேட்டி
“சேசிங்கில் இது நெருக்கமான போட்டியாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் எங்களுடைய டாப் ஆர்டர் நெருப்பாக விளையாடவில்லை. பிளஸ்ஸிங் முசர்பானி வேகமாக வளர்ந்து வருகிறார். அவர்கள் மிகவும் பசியுடன் இருக்கிறார். அந்த பசி இருக்கும் வரை அவருடைய செயல்பாடுகளின் வரைபடம் தொடர்ந்து உயரும். இது நாங்கள் நீண்ட நாட்களாக பேசிக் கொண்டிருக்கும் வேலை. இன்று கொஞ்சம் நாங்கள் நேர்மறையான ஷாட்டுகளை விளையாடினோம். இருப்பினும் அனுபவமின்மையால் எங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது” என்று கூறினார்.