அவர் தான் அடின்னு சொன்னாரு.. எதிரணி இதை செஞ்சா அடிச்சு நொறுக்குவேன்.. ஆட்டநாயகன் அபிஷேக் பேட்டி

Abhishek Sharma
- Advertisement -

ஜிம்பாப்வே மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி ஜூலை 7ஆம் தேதி ஹராரே நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 234/2 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு கடந்த போட்டியில் அறிமுகமாகி டக் அவுட்டான அபிஷேக் சர்மா இம்முறை சரவெடியாக விளையாடி சதமடித்து 100 (47) ரன்கள் குவித்தார்.

அவருடன் சேர்ந்து விளையாடிய ருதுராஜ் 77* (47) ரன்களும் ரிங்கு சிங் 48* (22) ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 235 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடுவதற்கு தடுமாறி 18/4 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக வேஸ்லி 43, லுக் ஜாங்வே 33 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3, ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் அபிஷேக்:
அதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தங்களை சாம்பியன் என்பதை நிரூபித்தது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து முக்கிய பங்காற்றி அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு பின் நான் மெதுவாக விளையாடுகிறேன் நீ அடி என்று ருதுராஜ் கெய்க்வாட் தன்னிடம் சொன்னதாக அபிஷேக் கூறியுள்ளார்.

அத்துடன் தனது கேரியரின் முதல் ரன்னை சிக்ஸராக எடுத்த அவர் 82 ரன்களில் இருந்த போது ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி சதமடித்தார். அப்படி தம்முடைய இடத்தில் எதிரணி பந்து வீசினால் கண்டிப்பாக அதை அடித்து நொறுக்குவேன் என்று தெரிவிக்கும் அபிஷேக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது என்னுடைய சிறந்த செயல்பாடு என்று நினைக்கிறேன். நேற்று சந்தித்த தோல்வி எங்களுக்கு எளிதல்ல”

- Advertisement -

“இன்று என்னுடைய நாளாக உணர்ந்தேன். எனவே அதை நான் பயன்படுத்திக் கொண்டேன். டி20 என்பது வேகத்தை பயன்படுத்தி அதை கடைசி வரை எடுத்துச் செல்வது பற்றியதாகும். இந்த நேரத்தில் என் மீது தன்னம்பிக்கை வைத்த பயிற்சியாளர்கள், கேப்டன்கள் மற்றும் அணி நிர்வாகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: 100 ரன்ஸ்.. ஜிம்பாப்வேவை தெறிக்க விட்டு சாம்பியன் என்பதை நிரூபித்த இந்தியா.. உலக சாதனை வெற்றியுடன் கம்பேக்

“ஒரு இளம் வீரராக அன்றைய நாள் உங்களுக்கானதாக அமைந்தால் அன்று நீங்கள் நன்றாக செயல்பட வேண்டும். நாங்கள் ஒவ்வொரு ஓவராக எடுத்து விளையாடினோம். நீ எதிரணியை அடிக்க வேண்டும் என்று ருதுராஜ் என்னிடம் சொன்னார். எப்போதும் எனது திறமையை நான் நம்புகிறேன். ஒருவேளை பந்து என்னுடைய இடத்தில் இருந்தால் அது முதல் பந்தாக இருந்தாலும் நான் அதை அடித்து நொறுக்குச் செல்வேன்” என்று கூறினார்.

Advertisement