MI vs KXIP : நேற்று ரோஹித்துக்கு பதிலாக களமிறங்கிய இளம் வீரர் – யார் தெரியுமா ?

நேற்றைய மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அவருக்கு பதிலாக டி20 போட்டிகளில் பல்வேறு நாடுகளில் விளையாடி மிகுந்த அனுபவம் வாய்ந்த பொல்லார்ட் மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். ரோஹித்துக்கு பதிலாக

Siddhesh
- Advertisement -

நேற்றைய மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அணியின் இளம் வீரர் சித்தேஷ் லாட் அணியில் இடம்பிடித்தார். பார்ப்பதற்கு வெள்ளைக்காரரை போன்று இருக்கும் இவர் மும்பையில் பிறந்தவர். இவரது பெற்றோர் தினேஷ் மற்றும் தீபாளி ஆவர். முமபை அணிக்காக 41 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ளார். மேலும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 39 போட்டிகளில் ஆடியுள்ளார். திறமையான பேட்ஸ்மேனான இவர் தந்து வாய்ப்புக்காக காத்திருந்து நேற்றுதான் முதல் வாய்ப்பை பெற்றார்.

lad

- Advertisement -

மும்பை அணியை சேர்ந்த சித்தேஷ் லாட் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளார். ஆனால், ஒரு போட்டியில் கூட அவருக்கு விளையாட வாய்ப்பில்லை. தற்போது 26 வயதாகும் இவர் 21 வயதிலிருந்து மும்பை அணியில் உள்ளார். மேலும், ரஞ்சி போட்டிகளில் 8 சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் அறிமுகமான லாட் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரது கவனத்தினும் ஈர்த்தார். 13 பந்துகளில் 15 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார், அதில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கும்.

ஐ.பி.எல் தொடரின் 24 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Pollard

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் சதமடித்து 100 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

Rahul

பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய மும்பை அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை தவித்தது. பிறகு இறங்கிய மும்பை அணியின் தற்காலிக கேப்டன் பொல்லார்ட் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 83 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். இதில் 10 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.

Pollard

ஒரு கட்டத்தில் மும்பை அணி எளிதாக தோற்றுவிடும் என்ற நிலையில் இருந்து பொல்லார்ட்டின் நம்பமுடியாத சிறப்பான பேட்டிங்கால் பஞ்சாப் அணியை திணறவைத்தார். சந்திக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு பறக்கவிட்டு மும்பை அணியை வெற்றபெற வைத்தார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்க பட்டார்.

Advertisement