வார்னர் – வில்லியம்சன் இருவரது கேப்டன்சியில் உள்ள வித்தியாசம் இதுதான் – சித்தார்த் கவுல் ஓபன்டாக்

Kaul
- Advertisement -

இந்திய அண்டர் 10 அணியில் கோலியுடன் இணைந்து விளையாடிய வேகப்பந்து வீச்சாளரான சித்தார்த் கவுல் இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடாத சித்தார்த் கவுல் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான இவர் தற்போது வரை 49 போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

kaul

- Advertisement -

அவ்வப்போது முன்னணி வீரர்களில் இருப்பினால் வாய்ப்பை இழக்கும் சித்தார்த் கவுல் தனது கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஓரளவு சிறப்பாகவே விளையாடி வருகிறார். சன்ரைசர்ஸ் அணியில் தொடர்ச்சியாக விளையாடி வரும் இவர் தற்போது அந்த அணியில் டேவிட் வார்னர் மற்றும் வில்லியம்சன் ஆகியோரது கேப்டன்சி குறித்து பேசியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாகவே சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக திகழ்ந்து வந்த டேவிட் வரை இந்த ஆண்டு பாதியிலேயே அந்த அணி நிர்வாகம் கேப்டன் பதவியை விட்டு தூக்கியது.

டேவிட் வார்னரின் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்வதால் தற்போது இம்முறை அவரை அணியை தலைமை தாங்க நிர்வாகம் நியமித்துள்ளது. அவரின் தலைமையில் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் அணி பைனலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Williamson

இந்நிலையில் இந்த இரண்டு கேப்டன்களின் கீழும் விளையாடியுள்ள சித்தார்த் கவுல் அவர்கள் இருவரது கேப்டன்சி குறித்து பேசுகையில் : என்னை பொருத்தவரை இருவரும் சிறப்பான கேப்டன்கள் தான். வில்லியம்சன் பவுலரால் என்ன செய்யமுடியும் என்பதை புரிந்து கொண்டு செயல்படுவார். அதேபோன்று டேவிட் வார்னரும் பவுலர்களால் என்ன செய்யமுடியும் என்பதை புரிந்து அவர்களது திறமையை வெளிக்கொணற முயல்வார்.

williamson 1

வில்லியம்சன் பவுலரின் திட்டங்களை கேட்டுவிட்டு அதன் பின்னர் தனது திட்டங்களையும் அதில் சேர்த்து ஆலோசனையை பகிர்வார். அதேபோல் வார்னர் வீரர்களிடம் உள்ள திறமையை உணர்ந்து இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் சொல்வார் என்று தெரிவித்தார். இதன் மூலம் இருவரும் பவுலர்களை மதித்து அவர்களின் இயல்பான ஆட்டத்தை எதிர்பார்க்கும் கேப்டன்கள் என்று சித்தார்த் கவுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement