இங்கிலாந்து தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்த சென்னை அதிரடி வீரர்..! – யார் தெரியுமா ?

india
- Advertisement -

அடுத்த ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி ஐயர்லாந்து சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த போட்டிகளை தொடர்ந்து இங்கிலாந்திற்கு செல்லும் இந்திய அணி 4 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரிலும் பங்கேற்கவுள்ளது. இந்த இரு தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ இன்று அறிவித்துள்ளது.

suresh-raina

- Advertisement -

இந்த தொடரில் தற்போது நடந்து வரும் ஐபில் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இரு இளம் வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சென்னை அணியில் விளையாடி வரும் அம்பதி ராயுடுவும், ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்க இருந்து வரும் சித்தார்த் கவுலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இரு தொடருக்கும் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிவரும் ரஹானே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டேட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்து தொடர்களில் பங்கேற்கப்போவதில்லை. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்திற்கு எதிரான தொடர்களில் விளையாடும் இந்திய அணியின் விவரம் வெளியாகியுள்ளது.

ambati

விராட் கோலி,தவாண், ரோகித் சர்மா,கே.எல்.ராகுல்,சுரேஷ் ரய்னா,மணிஷ் பாண்டி,தோனி, தினேஷ் கார்த்திக்,அம்பத்தி ராயுடு, சாஹல்,குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர்,புவனேஷ்வர்குமார், பும்ரா, ஹர்திக்பாண்டியா,சித்தார்த் கவுல்,உமேஷ் யாதவ்.போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement