அந்த டெஸ்ட்ல பாஸ் ஆகிட்டா சச்சின், விராட் கோலி வரிசையில் அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் – சபா கரீம் பாராட்டு

Karim
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த ஒய்ட் வாஷ் வெற்றிகளை பெற்றது. இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் தரவரிசையில் உலகில் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறியுள்ள இந்தியாவுக்கு முகமது சிராஜ் போன்ற தரமான இளம் வீரர்களும் கிடைத்து வருகிறார்கள். குறிப்பாக பேட்டிங் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் தன்னை வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தி வருகிறார். கடந்த 2018 அண்டர்-19 உலக கோப்பையை இந்தியா வெல்வதற்கு தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய அவர் 2019இல் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

Shubman Gill 1

- Advertisement -

ஆரம்பத்தில் சுமாரான செயல்பாடுகள் மற்றும் காயத்தால் வெளியேறிய அவர் அதன் பின் 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பதிவு செய்த மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் பின் 2022 ஐபிஎல் தொடரில் முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பையை வெல்லும் அளவுக்கு அதிக ரன்கள் குவித்து காரணத்தால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

சச்சின், விராட் வரிசையில்:
அதன் பின் கடந்த ஜனவரியில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதமடித்த அவருக்கு அதே சுற்றுப்பயணத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இசான் கிசானுக்கு பதிலாக சமீபத்திய இலங்கை தொடரில் வாய்ப்பு கொடுப்பது சரியல்ல என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அந்த வாய்ப்பில் சதமடித்து அடுத்ததாக நடைபெற்ற நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்த அவர் இஷான் கிஷானுக்கு எந்த விதத்திலும் குறைந்தவன் அல்ல என்பதை நிரூபித்து 2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

Virat kohli Shubman Gill

அதை விட அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சீரான வேகத்தில் பெரிய ரன்களை குவிக்கும் அவர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது இந்திய பேட்டிங் ஜாம்பவான்கள் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளதாக ரசிகர்கள் இப்போதே பாராட்டி வருகிறார்கள். அதையே தெரிவிக்க முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அசத்தும் பட்சத்தில் நிச்சயமாக சுப்மன் கில் வருங்கால இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுப்பார் என்று பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவரிடம் சுபாவம் நன்றாக உள்ளது. விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் அமைத்த பாரம்பரியத்தை அவரால் முன்னெடுத்து செல்ல முடியும் என்று நம்புகிறேன். இருப்பினும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு சோதனை காத்திருக்கிறது. ஏனெனில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் அவர் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும் அதில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக உருவெடுப்பார் என்று நம்பலாம்”

Karim

“ஏனெனில் அவரைப் போன்ற நுணுக்கங்கள் நிறைந்த இளம் வீரரை நீண்ட நாட்கள் கழித்து நாம் பார்க்கிறோம். எனவே வருங்காலங்களில் கடினமான எதிரணிகளுக்கு எதிராக அவரது செயல்பாடுகளை நாம் கவனித்து பார்க்க வேண்டும். குறிப்பாக வெளிநாடுகளில் கடினமான வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக அவரது திறமையை நாம் சோதிக்க வேண்டும். ஆனால் தற்சமயத்தில் அவர் தனது கேரியரில் மிகச் சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளார்”

இதையும் படிங்க: தோனியிடம் கத்துக்கிட்டதே போதும், இந்திய தொடரில் காத்திருக்கும் சவால் பற்றி – நியூசி கேப்டன் மிட்சேல் சான்ட்னர் அதிரடி பேட்டி

“அவருடைய பேட்டிங்கில் பேசுவதற்கு நிறைய உள்ளது. அவரது பேட்டிங்கில் முதிர்ச்சி தெரிகிறது. அதாவது போட்டியை நன்கு படித்து விழிப்புணர்வுடன் இருக்கும் அவர் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்கிறார். தனது ஷாட்டுகளில் கவனம் கொண்டுள்ள அவர் ஸ்கோர் போர்டை எப்படி நகர்த்த வேண்டும் பார்ட்னருடன் இணைந்து எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதையும் கற்றுள்ளார்” என்று கூறினார்.

Advertisement