10 போட்டியில் 22 ஆவரேஜ்.. ஸ்லோவாக துவங்கிய கில்.. ஜேக் காலிஸ் மாதிரி சூப்பர்ஸ்டாரா வருவாரு.. பீட்டர்சன் பேட்டி

Kevin Pieterson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளின் விளையாடி வருகிறது. அத்தொடரின் 3வது போட்டி ஜூன் 10ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. குறிப்பாக முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் தோற்கடித்த இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாகவும் இந்தியா சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு கேப்டன் சுப்மன் கில் 269, 161 என மொத்தம் 430 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த காலங்களில் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை.

- Advertisement -

ஜேக் காலிஸ் போல:

அதனால் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்ற அவரை கேப்டனாக நியமனமிக்கலாமா? என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ள சுப்மன் கில் இந்தியாவை தலைமைத் தாங்க தாம் சரியான கேப்டன் என்பதை நிரூபிக்கத் தொடங்கியுள்ளார். முன்னதாக ஜாம்பவான் ஜேக் காலிஸ் முதல் 10 போட்டிகளில் 22 என்ற சராசரியை மட்டுமே கொண்டிருந்ததாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் 2024 பிப்ரவரி 2ஆம் தேதியன்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஆனால் அங்கிருந்து சிறப்பாக விளையாடத் துவங்கிய காலிஸ் மகத்தான வீரராக மாறியதைப் போல் சுப்மன் கில்லுக்கு போதுமான நேரத்தை கொடுங்கள். சுப்மன் கில் சீரியஸான பிளேயர் என்றும் தெரிவித்திருந்தார். அது உண்மையானதாக கடந்த 3ஆம் தேதி “என்னுடைய ட்வீட் நினைவிருக்கிறதா?” என்று பீட்டர்சன் பதிவிட்டு பாராட்டினார்.

- Advertisement -

சூப்பர்ஸ்டாராக வருவாரு:

இந்நிலையில் ஜேக் காலிஸ் போல சுப்மன் கில் மெதுவாக துவங்கினாலும் தம்முடைய கேரியரை சூப்பர்ஸ்டாராக முடிப்பார் என்று பீட்டர்சன் பாராட்டியுள்ளார். இது பற்றி லண்டனில் அவர் பேசியது பின்வருமாறு. “நடப்பு தொடரில் அவருடைய பேட்டிங்கை நான் பார்க்கவில்லை. சொல்லப்போனால் எந்த கிரிக்கெட்டையுமே நான் பார்க்கவில்லை. இருப்பினும் அவருடைய நம்பர்களை (430 ரன்கள்) பார்த்து எனக்கு ஆச்சரியமாக இல்லை”

இதையும் படிங்க: ஜோ ரூட் மகுடத்தை காலி செய்த இந்தியா.. 19 இடங்கள் முன்னேறிய சுப்மன் கில்.. ஆகாஷ் தீப், சிராஜ் அசத்தல்

“ஏனெனில் சில வருடங்களுக்கு முன்பாகவே சுப்மன் கில்லுக்கு ஆதரவு கொடுங்கள் என்று என்னுடைய தலையை உயர்த்தி கூறியிருந்தேன். ஜேக் காலிஸ் மிகவும் மெதுவாகத் துவங்கினாலும் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார். கடந்த வருடம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் சுப்மன் கில்லை பார்த்தேன். மிகவும் ரிலாக்ஸாக பொறுமையுடன் விளையாடும் அவரை ஆதரியுங்கள் என்று சொன்னேன். அடுத்த நாளே அவர் சதத்தை அடித்தார். அவரிடம் அந்தளவுக்கு தரம் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement