ஜோ ரூட் மகுடத்தை காலி செய்த இந்தியா.. 19 இடங்கள் முன்னேறிய சுப்மன் கில்.. ஆகாஷ் தீப், சிராஜ் அசத்தல்

ICC Rankings
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. அதனால் பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாக சாதனை படைத்த இந்தியா தொடரை சமன் செய்து அசத்தியது.

அடுத்ததாக 3வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 10ஆம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்திய கேப்டன் சுப்மன் கில் தம்முடைய கேரியரில் முதல் முறையாக டாப் 10 இடங்களுக்குள் நுழைந்து 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.

- Advertisement -

முன்னேறிய கில்:

கடந்த காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடிய அவர் இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக 25வது இடத்தில் இருந்தார். ஆனால் முதல் போட்டியில் சதத்தை அடித்த கில் 2வது போட்டியில் 430 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து நிறைய சாதனைகளைப் புரிந்தார். அதனால் 16 இடங்கள் முன்னேறிய அவர் உலகின் 6வது டெஸ்ட் பேட்ஸ்மேன் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

அவரை தவிர்த்து டாப் 10 பேட்ஸ்மேன்களில் ஜெய்ஸ்வால் தொடர்ந்து 4வது இடத்தில் ஜொலித்து வருகிறார். ரிஷப் பண்ட் ஒரு இடம் சரிந்து 8வது இடத்தில் இருக்கிறார். இதுநாள் வரை நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்த இங்கிலாந்தின் ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிரான தொடரில் பெரியளவில் ரன்கள் குவிக்கவில்லை. அதனால் நம்பர் ஒன் இடத்தை இழந்துள்ள 2வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

- Advertisement -

ஆகாஷ், சிராஜ் முன்னேற்றம்:

மறுபுறம் இளம் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் 2வது போட்டியில் 158 ரன்கள் குவித்து அசத்தினார். அதனால் ஜோ ரூட்டை முந்தியுள்ள அவர் புதிய உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார். டாப் 10 பவுலர்கள் தரவரிசையில் ஜஸ்ப்ரித் பும்ரா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக ஜொலித்து வருகிறார்.

இதையும் படிங்க: சாய் சுதர்சனால் கருண் நாயருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.. கடைசி சேன்ஸ் இதுதான் – விவரம் இதோ

அவரைத் தவிர்த்து ஜடேஜா மட்டுமே 10வது இடத்தில் இருக்கிறார். கடந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்த இந்தியாவின் ஆகாஷ் தீப் 84வது இடத்திலிருந்து முன்னேறி 45வது இடத்தைப் பிடித்துள்ளார். முகமது சிராஜ் 6 இடங்கள் முன்னேறி 22வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டாப் 10 ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் தொடர்ந்து ஜடேஜா உலகின் நம்பர் ஒன் இடத்தில் ஜொலித்து வருகிறார். அணிகள் தர வரிசையில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்துக்குப் பின் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது.

Advertisement