இவர் பேட்டிங் செய்யும்போது எதிரில் இருந்து பார்த்தால் ஹைலைட்ஸ் பார்த்த மாதிரியே இருக்கும் – சுப்மான் கில் பேட்டி

Gill
- Advertisement -

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில். இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இவர் உண்மையில் பஞ்சாபை சேர்ந்தவர். ஊரடங்கு நிலையில் வீட்டிற்குள்ளேயே அடைந்துள்ள இவர் கொல்கத்தா அணி ஏற்பாடு செய்த டுவிட்டர் நேரலையில் கலந்துகொண்டு பதிலளித்தார்.

Gill 2

- Advertisement -

அதில் பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அதில் ரசிகர் ஒருவர் ஓய்வு பெற்ற வீரர்களுடன் விளையாடினால் யாருடன் விளையாடுவார்கள்? என்று கேட்டார். அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் சச்சினுடன் தான் விளையாடுவேன் என்று கூறினார் சுப்மன் கில். கடந்த 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக தேர்வான அவர் அந்த தொடரில் 499 ரன்கள் அடித்தார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அவரது அணி உரிமையாளர் ஷாருக்கான், அணி வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், அனைவரையும் சரிசமமாக நடத்துவார் என்று கூறினார். மேலும் அந்த தொடரில் தனது அசாத்தியமான ஆட்டத்தை அவர் இந்திய அணியிலும் விரைவில் இடம்பிடித்தார்.

Gill 1

அதேபோல் தன் சக வீரரான ஆல்ரவுண்டர் ஆன்ட்ரு ரஸலுடன் பேட்டிங் செய்வது மிகவும் பிடிக்கும் என்று கூறினார். அதே நேரத்தில் அவர் ஆடும் போது எதிர்முனையில் இருந்து அவரது பேட்டிங்கை பார்த்தால் ஹைலைட்ஸ் பார்ப்பது போல் இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஏனெனில் ரசலின் ஆட்டம் எதிரில் இருந்து பார்க்கையில் அந்த அளவு அதிரடியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கில் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தாலும் அவருக்கான வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் நல்ல உயரமான சிறப்பான ஆட்டக்காரரான இவர் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடினால் நிச்சயம் தொடர்ந்து நீண்டகாலம் விளையாடும் நல்ல வாய்ப்பு உள்ளதாக கில்லிற்கு ஆதரவும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement