இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் நிறைவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று இந்த தொடரில் தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன. அதன் காரணமாக இந்த தொடரானது தற்போது சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.
ராகுல் டிராவிடின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் சுப்மன் கில் :
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை ஜூலை 10-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டாவது போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது.
இதன் காரணமாக அதே நம்பிக்கையுடன் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரில் முன்னிலை பெரும் முனைப்போடு காத்திருக்கிறது. அதே வேளையில் சொந்த மண்ணில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்று தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் தயாராகி வருகிறது. இதன் காரணமாக இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியானது அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 146 ரன்கள் சராசரியுடன் 585 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக நடைபெற்று முடிந்த எட்ஜ்பேஸ்டன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 269 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 161 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் நாளைய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் சுப்மன் கில் முன்னாள் இந்திய ஜாம்பவான ராகுல் டிராவிட்டின் மாபெரும் சாதனையை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அந்த வகையில் சுப்மன் கில் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரராக ராகுல் டிராவிட் 602 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க : இப்போ “தேனிலவு” மாதிரி தான் இருக்கும்.. ஆனா இனிமே தான் அந்த பிரஷர சுப்மன் கில் பாப்பாரு – கங்குலி கருத்து
அவரது இந்த சாதனையை முறியடிக்க கில்லுக்கு வெறும் 18 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இந்த மூன்றாவது போட்டியிலேயே அந்த சாதனை நிகழ்த்துவார் என்பது உறுதி. அதுமட்டுமின்றி இந்த தொடரில் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ள வேளையில் கிட்டத்தட்ட அவர் 800 முதல் 1000 ரன்களை வரை நோக்கி செல்ல கூட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



