சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
டான் பிராட்மேனை முந்த காத்திருக்கும் சுப்மன் கில் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 10-ம் தேதி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய இருக்கும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் இரட்டை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் இருக்கிறார்.
அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் சுப்மன் கில் நிகழ்த்தப்போகும் இரட்டை சாதனை யாதெனில் : இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து சுப்மன் கில் 585 ரன்கள் அடித்துள்ளார். மேலும் அவர் இனிவரும் 6 இன்னிங்ஸ்களில் 225 ரன்கள் அடித்தால் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரரான டான் பிராட்மேனை முன்வந்துவார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக 1936 மற்றும் 37 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டான் பிராட்மேன் 810 ரன்களை குவித்ததே இதுவரை சாதனையாக இருக்கிறது. அதனை முறியடிக்கும் வாய்ப்பு சுப்மன் கில்லுக்கு பிரகாசமாக இருக்கிறது. அதுமட்டும் இன்றி மற்றொரு சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : 13க்கு 13 தோல்வி.. டாஸ் வீசுவதில் இந்தியா பரிதாப உலக சாதனை.. 1999க்குப்பின் நேர்ந்த பரிதாபம்
கடந்த 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய டான் பிராட்மேன் ஒரே தொடரில் 974 ரன்களை குவித்துள்ளார். இதுவே ஒரு தொடரில் ஒரு வீரர் குவித்த அதிகபட்ச ரன்களாக இருக்கிறது. அதனை முறியடிக்க இன்னும் சுப்மன் கில்லுக்கு 390 ரன்கள் மட்டுமே தேவை. அதையும் எட்டிப் பிடிக்க வாய்ப்புள்ளதால் இந்த இரட்டை சாதனைக்காக தற்போது சுப்மன் கில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



