அவங்க 2 பேர் ஆடுன அட்டகாசமான இன்னிங்ஸ் தான் வெற்றிக்கு காரணம் – கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டி

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று ஹராரே நகரில் நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இந்த இரண்டாவது போட்டியில் அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உத்வேகத்துடன் களமிறங்கியது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 100 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன்களையும், ரிங்கு சிங் 48 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்ததது.

அதன்காரணமாக இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கில் கூறுகையில் :

- Advertisement -

உண்மையிலேயே இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் நாங்கள் வெற்றி பாதிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி. அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக பவர்பிளே ஓவர்களின் போது அவர்கள் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. முதல் போட்டியின் போது எங்களால் அழுத்தத்தை தாங்க முடியாமல் தோல்வியை சந்தித்தோம்.

இதையும் படிங்க : 6, 6, 6.. ரோஹித்தையே மிஞ்சிய அபிஷேக் சர்மா.. தனித்துவமான உலக சாதனை.. இந்திய வீரராக 2 வரலாற்று சாதனை

ஆனால் இந்த போட்டியில் மீண்டு வந்து வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அணியில் உள்ள பல்வேறு வீரர்கள் மிகவும் புதிய வீரர்கள். சர்வதேச கிரிக்கெட்டுக்கு தற்போது தான் வந்துள்ளதால் சரியாக முதல் போட்டியில் செயல்பட முடியவில்லை. ஆனால் இனிவரும் போட்டிகளில் நிச்சயம் அவர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இன்னும் மூன்று போட்டிகள் எதிர்வர காத்திருக்கின்றன அதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம் என சுப்மன் கில் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement