டாஸ் முக்கியம் இல்ல.. எங்களுக்கு இதுதான் முக்கியம்.. வெற்றிக்கு பின்னர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய – கேப்டன் கில்

Shubman Gill
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது அக்டோபர் இரண்டாம் தேதி அகமதாபாத் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன் பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் குவித்திருந்த வேளையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

எல்லோருமே சிறப்பாக விளையாடினார்கள் : சுப்மன் கில் பாராட்டு

பின்னர் 286 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 146 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் சதம் அடித்தது மட்டுமின்றி இரண்டாவது இன்னிங்ஸின் போது நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல், துருவ் ஜுரேல், ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் சதம் அடித்து அசத்தியிருந்தார்கள்.

அதேபோன்று பந்துவீச்சில் முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்த வேளையில் இரண்டாவது இன்னிங்ஸில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : இந்த போட்டியில் டாசில் தோல்வியை சந்தித்தது உண்மை தான். ஆனால் போட்டியில் வெற்றி பெற்று விட்டோம் அதுதான் முக்கியம். என்னை பொறுத்தவரை டாஸ் என்பதை விட போட்டியின் முடிவு என்பது முக்கியம். அந்த வகையில் இந்த போட்டி எங்களுக்கு மிகச் சிறப்பான ஒன்றாக அமைந்தது.

இதையும் படிங்க : ரோஹித், ஜடேஜாவுக்கு டாட்டா.. புதிய ஒருநாள் கேப்டன் கில் தலைமையில் ஆஸி தொடருக்கான அணி இதோ

இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. மூன்று வீரர்கள் நமது அணி சார்பாக இந்த போட்டியில் சதம் அடித்துள்ளனர். பீல்டிங்கிலும் நமது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தது உண்மையிலேயே மகிழ்ச்சி. இந்த போட்டியில் குறை கூறுவதற்கு என்று எதுவும் இல்லை. அனைத்து வீரர்களுமே தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர் என சுப்மன் கில் மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement