இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், அனுபவ வீரர்களுமான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துவிட்டதால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒன்றாக விளையாடிய கையோடு இருவரும் ஓய்வை அறிவிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
டொமெஸ்டிக் போட்டிகளில் ரோஹித் கோலி ஆடனுமா ? : சுப்மன் கில் பதில்
ஆனால் அடுத்த உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதாலும். அதற்குள் அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 40 வயதை எட்டி விடுவார்கள் என்பதனாலும் அடுத்த உலகக் கோப்பை தொடரில் அவர்கள் விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே வேளையில் அடுத்த உலக கோப்பை தொடரில் அவர்கள் இருவரும் விளையாட வேண்டுமெனில் அதற்கு முன்னர் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற அழுத்தம் நிர்வாகத்தின் மூலம் அளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
ஏனெனில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்திய அணி குறிப்பிட்ட வெகு சில ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதால் அவர்கள் தொடர்ந்து டச்சில் இருக்க வேண்டும் என்பதற்காக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று விளையாட வேண்டும் என்றும் அந்த வகையில் எதிர்வரும் விஜய் ஹசாரே தொடரில் அவர்களை விளையாட வைக்க அஜித் அகார்கர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை முடித்துள்ள இந்திய அணியானது அடுத்ததாக நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பின்னர் ஜனவரி 11-ஆம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களுக்கு முன்னதாக விஜய் ஹசாரே தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளது.
அந்த தொடரில் அவர்கள் இருவரும் விளையாட வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் விஜய் ஹசாரே தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர்கள் விளையாடுவார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : இதுவரை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து நாங்கள் எந்த ஒரு ஆலோசனையும் நடத்தவில்லை.
இதையும் படிங்க : 38 வயதில் தோனியை முந்திய ஹிட்மேன் ரோஹித்.. ஆஸியில் 2 வரலாற்று சாதனை.. கம்பீருக்கு பதிலடி
தற்போது தான் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடர் முடிவடைந்துள்ளது. அடுத்த தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்னதாக பெரிய இடைவெளி கிடையாது. எனவே தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் முடிந்த பின்னர் அவர்கள் இருவரது டொமஸ்டிக் சீசன் குறித்து ஆலோசனை செய்வோம் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.



