38 வயதில் தோனியை முந்திய ஹிட்மேன் ரோஹித்.. ஆஸியில் 2 வரலாற்று சாதனை.. கம்பீருக்கு பதிலடி

Rohit Sharma 2
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா தோற்றது. இருப்பினும் அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 237 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய இந்திய அணி 38.3 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா சதத்தை அடித்து 121* ரன்கள் அடித்து தம்மை கழற்றி விடத் துடிக்கும் தேர்வுக் குழுவுக்கு பதிலடி கொடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிய விராட் கோலி 74* ரன்கள் அடித்துப் போட்டியை ஃபினிஷிங் செய்தார்.

- Advertisement -

தோனியை முந்திய ரோஹித்:

அத்துடன் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டானதால் விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அவர் தம்மை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்தார். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். அத்துடன் 8, 73, 121* என இத்தொடரில் அதிக ரன்கள் (202) குவித்த வீரராக சாதனை படைத்த அவர் தொடர்நாயகன் விருதையும் வென்றார்.

ஏற்கனவே 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணியில் அசத்திய ரோஹித் சர்மா தொடர்நாயகன் விருதை வென்றார். தற்போது இதையும் சேர்த்து அவர் ஆஸ்திரேலியாவில் 2 முறை தொடர்நாயகன் விருது சென்றுள்ளார். இதன் வாயிலாக ஆஸ்திரேலியாவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 முறை தொடர்நாயகன் விருது வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

- Advertisement -

அகர்கர், கம்பீருக்கு பதிலடி:

அவரை தவிர்த்து எம்எஸ் தோனி மட்டுமே இந்தியாவுக்காக ஆஸ்திரேலியாவில் 1 முறை (2019இல்) தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வயதில் தொடர்நாயகன் விருதை வென்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் தோனியை முந்தி படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரோஹித் சர்மா: 38 வருடம் 178 நாட்கள்
2. எம்எஸ் தோனி: 37 வருடம் 194 நாட்கள்
3. சுனில் கவாஸ்கர்: 37 வருடம் 190 நாட்கள்

இதையும் படிங்க: எப்போவுமே இங்க விளையாடுறது ரொம்ப ஹேப்பி.. ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு நன்றி கூறிய – ரோஹித் சர்மா

இத்தனைக்கும் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய அடுத்தடுத்த 2 ஐசிசி கோப்பைகளை கேப்டனாக வென்ற ரோஹித் 2027 உலகக் கோப்பையில் இந்தியாவை தலைமைத் தாங்க விரும்பினார். ஆனால் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா? என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இப்போதே கேப்டன்ஷிப் பதவியிலிருந்து கழற்றி விட்டுள்ளனர். அத்துடன் 2027 உலகக் கோப்பையில் அவரையும் விராட் கோலியையும் கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது. அவர்களுக்கு இப்போட்டியில் இருவருமே தக்க பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement