எப்போவுமே இங்க விளையாடுறது ரொம்ப ஹேப்பி.. ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு நன்றி கூறிய – ரோஹித் சர்மா

Rohit
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணி மூன்றாவது போட்டியின் போது வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்ப இருக்கிறது.

ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரோஹித் சர்மா :

இந்த ஆஸ்திரேலியா தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக ரோகித் சர்மா கேப்டன் பதிவிலிருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். எனவே ரோகித் சர்மாவின் ஆட்டம் இந்த தொடரில் எவ்வாறு இருக்கப்போகிறது? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 8 ரன்களை மட்டுமே அடித்த ரோகித் சர்மா அடிலெய்டு நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது 73 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஆட்டமிழக்காமல் சதம் அடித்து இந்திய அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாகவே இந்திய அணி வெற்றி பெற்றதால் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதினையும், தொடர் நாயகன் விருதினையும் அவர் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் இந்த தொடரில் விளையாடிய அனுபவம் குறித்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : நான் எப்பொழுதுமே ஆஸ்திரேலியா வந்து விளையாடுவதை விரும்புகிறேன். அதிலும் குறிப்பாக சிட்னி மைதானத்தில் விளையாடுவது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான விடயம். கடந்த 2008 ஆம் ஆண்டு நான் இங்கு வந்து முதல் முறையாக விளையாடியிருந்தேன்.

- Advertisement -

தற்போதும் அந்த தொடர் எனது நினைவில் இருக்கிறது. இந்த தொடரையும் நான் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு விளையாடினேன். அடுத்த முறை நான் இங்கு வருவேனா? மாட்டேனா? என்பது தெரியாது. ஆனால் இம்முறை விளையாடிய ஒவ்வொரு போட்டியையும் ரசித்து விளையாடினேன். கடந்த 15 ஆண்டுகளாக விளையாடியதை மறந்து இனிவரும் ஒவ்வொரு போட்டியையும் புதிய போட்டியாக பார்த்து விளையாட விரும்புகிறேன்.

இதையும் படிங்க : 37 வயதானலும் 2 டக் யார்ன்னு காமிச்சுடுச்சு.. ரோஹித்துடன் இதை 2013இல் ஆரம்பிச்சேன்.. விராட் கோலி பேட்டி

ஆஸ்திரேலியா மண்ணில் எப்பொழுது விளையாடினாலும் அது மகிழ்ச்சி தான். என்னைப் போன்றே விராட் கோலிக்கும் அதே போன்ற உணர்வு தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கு நன்றி என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement