நிதீஷ் ரெட்டிக்கு இரண்டாவது டெஸ்டில் பந்துவீசாதது ஏன்? கேப்டன் கில் கொடுத்த விளக்கம் – விவரம் இதோ

Gill and Nitish
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி இம்முறை வெற்றி பெற்றுள்ளது ரசிகர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிதீஷ் ரெட்டி பந்துவீசாதது ஏன்? : சுப்மன் கில் விளக்கம்

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக நிதீஷ் ரெட்டி விளையாடியிருந்தார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 54 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 43 ரன்கள் அடித்து பேட்டிங்கில் தனது திறனை நிரூபித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் இந்த போட்டியில் அவருக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்படி ஒரு முழுநேர ஆல்ரவுண்டராக நிதீஷ் ரெட்டியை அணியில் எடுத்துவிட்டு அவருக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச சுப்மன் கில் வாய்ப்பு வழங்காதது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நிதீஷ் ரெட்டிக்கு இந்த போட்டியில் பந்துவீச வாய்ப்பு வழங்காதது ஏன்? என்பது குறித்த ஒரு தெளிவான விளக்கத்தை கேப்டன் கில் போட்டிக்கு பின்னர் அளித்திருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் நிதிஷ் ரெட்டிக்கு பந்துவீச வாய்ப்பு வழங்காதது இயல்பான ஒன்றுதான். அவரை தேவையான நேரத்தில் பயன்படுத்துவோம்.

- Advertisement -

இந்த போட்டியில் அவருக்கு பந்துவீச வேண்டிய தேவை ஏற்படவில்லை. வெளிநாட்டு போட்டிகளில் மட்டுமே நாங்கள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு அழுத்தத்தை தரும்.

இதையும் படிங்க : வருத்தமாக இருந்தாலும் இந்த தொடரில் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்.. தோல்விக்கு பிறகு – ரோஸ்டன் சேஸ் பேட்டி

இதுபோன்ற சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் அவர்களின் திறனை வளர்த்தெடுத்து முக்கியமான பெரிய போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும். இந்த போட்டியை பொருத்தவரை அவருக்கு பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இனிவரும் தொடர்களில் நிச்சயம் அவர் அதிகமான ஓவர்களை வீசுவார் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement