வருத்தமாக இருந்தாலும் இந்த தொடரில் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்.. தோல்விக்கு பிறகு – ரோஸ்டன் சேஸ் பேட்டி

Roston Chase
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே அகமதாபாத் நகரில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் இந்திய அணியிடம் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்தங்கியிருந்தது.

தோல்வி அடைந்தாலும் நிறைய கற்றுக்கொண்டோம் : ரோஸ்டன் சேஸ்

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி துவங்கி இன்று போட்டியின் கடைசி நாளில் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

அதே வேளையில் இந்த தொடரின் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து வெஸ்ட் இண்டீஸ் அணி வருத்தத்துடன் நாடு திரும்ப காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் இந்த தொடர் குறித்தும், தாங்கள் அடைந்த இந்த தோல்வி குறித்தும் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் கூறுகையில் :

கடந்த போட்டியில் இருந்து நாங்கள் சில பாடங்களை கற்றுக் கொண்டோம். இந்த போட்டியை பொருத்தவரை ஜான் கேம்பில் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் விளையாடிய விதம் பாசிட்டிவாக இருந்தது. அவர்கள் இருவருமே எங்களது அணிக்காக மிகச் சிறப்பாக போராடி சதம் அடித்திருந்தனர்.

- Advertisement -

நாங்கள் 100 ஓவர்கள் மேல் பேட்டிங் செய்து ரொம்ப நாள் ஆகிறது. ஆனால் இம்முறை 100 ஓவர்களுக்கு மேல் விளையாடியதில் மகிழ்ச்சி. போட்டியின் ஐந்தாம் நாள் வரை சென்றது உண்மையிலேயே அபாரமான ஒன்று. எப்போதுமே நாங்கள் முழுமையாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அந்த வகையில் தற்போது அணியின் பல்வேறு மாற்றங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு சிறப்பான நிலையை நோக்கி நகர்வதாக உணர்கிறேன்.

இதையும் படிங்க : இப்படி ஒரு அணியை தலைமை தங்குவதில் மகிழ்ச்சி.. வெ.இ அணியை வீழ்த்தியது குறித்து – சுப்மன் கில் பேட்டி

இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஆடுவது என்பது மிக சவாலான ஒன்று. இந்த போட்டியிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாலே நாங்கள் தோல்வியை சந்தித்தோம் இருந்தாலும் நாங்கள் இந்த தோல்வியை நினைத்து வருந்தாமல் இன்னும் நல்ல முன்னேற்றத்திற்காக உழைக்க காத்திருக்கிறோம் என ரோஸ்டன் சேஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement