- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு கேப்டனாக இருப்பது குறித்து – சுப்மன் கில் பேசியது என்ன?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது அக்டோபர் 19-ஆம் தேதியான இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

ஒரு இளம் கேப்டனாக இது எனக்கு மிகப்பெருமை : சுப்மன் கில்

இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சுப்மன் கில் இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், ஜாம்பவான்களுமான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இருக்கும் அணியை தலைமை தாங்குவது குறித்து சில கருத்துக்களை அளித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் இந்த தொடருக்கு முன்பாக கூறியதாவது : விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நாங்கள் வளர்ந்து வந்துள்ளோம். அப்படி பார்த்த ஜாம்பவான் வீரர்களை வழிநடத்துவதில் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

அவர்களிடம் இருந்து நான் ஏகப்பட்ட விடயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். இன்றளவும் அவர்கள் இருவரும் இளம் வீரர்களுக்கு நிறைய விடயங்களை கற்றுக் கொடுத்து ஒரு முன் உதாரணமாக திகழ்கின்றனர். உண்மையிலேயே அவர்களுக்கு கேப்டனாக நான் இருப்பது மிகப் பெருமையாக இருக்கிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரை அவர்களது பங்கு அளப்பரியது. ஏகப்பட்ட நினைவுகளை அவர்கள் இருவரும் நமக்கு வழங்கியுள்ளனர். நான் கேப்டனாக களத்தில் இருந்தாலும் அவர்களிடம் இருந்து அறிவுரை கேட்க தயங்க மாட்டேன். இந்த தொடரில் நிச்சயம் எனது சிறப்பான கேப்டன்சியை வெளிப்படுத்துவேன் என்றும் சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கேப்டனாக மஹேந்திர சிங் தோனியின் மாபெரும் சாதனையை முறியடித்த சுப்மன் கில் – விவரம் இதோ

இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -