2-ஆவது போட்டியில் பும்ராவை சேர்க்காதது இதற்காகத்தான்.. ஆனா 3 ஆவது போட்டியில் ஆடுவாரு – சுப்மன் கில் உறுதி

Gill and Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

பும்ராவை சேர்க்காதது ஏன்? : சுப்மன் கில் விளக்கம்

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று ஜூலை 2-ஆம் தேதி பர்ம்மிங்ஹாம் நகரில் சற்றுமுன் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

- Advertisement -

ஏற்கனவே அவர்கள் அறிவித்தபடி இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் இன்றி முதல் போட்டியில் விளையாடிய அதே அணிதான் விளையாடுவதாகவும் அறிவித்திருந்தார். பின்னர் தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் :

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் இருப்பதாகவும் அதன்படி கடந்த போட்டியில் விளையாடிய ஜஸ்ப்ரீத் பும்ரா, ஷர்துல் தாகூர், சாய் சுதர்சன் ஆகியோர் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் விளையாடுவதாகும் அறிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் பிளேயிங் லெவனில் விளையாடுவாரா? மாட்டாரா? என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்தும் சில கருத்துக்களை கூறியிருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ராவை விளையாட வைக்க வேண்டும் என்ற திட்டத்தில் தான் இருந்தோம். ஆனால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டே இந்த போட்டியில் நாங்கள் அவரை பயன்படுத்தவில்லை.

இதையும் படிங்க : மாசம் 10 லட்சம் கேட்டு கேஸ் போட்ட முகமது ஷமியின் மனைவி.. நீதிமன்றம் அளித்த உத்தரவு – விவரம் இதோ

ஆனால் அடுத்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமான போட்டி என்பதாலும் அந்த மைதானத்தில் பும்ரவால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதாலும் இந்த போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கி அடுத்த போட்டியில் விளையாட வைக்க இருப்பதாகவும் சுப்மன் கில் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement