இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான 34 வயதான முகமது ஷமி கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 108 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் போட்டிகளிலும்கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் 120 ஆட்டங்களில் பங்கேற்று விளையாடியுள்ளார்.
முகமது ஷமிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் :
இந்திய அணியின் மூன்று வகையான முதன்மை அணியிலும் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்துவரும் அவர் சமீப காலமாகவே காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள அவர் உள்ளூர் தொடர்களில் கவனம் செலுத்துகிறார்.
அதனால் வெகுவிரைவில் இந்திய அணிக்காக மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஹாசின் ஜஹான் என்பவரை திருமணம் செய்து கொண்ட முகமது ஷமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரிடம் இருந்து முறையாக விவாகரத்து பெற்று பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
அதன்பிறகு முகமது ஷமியின் மீது வழக்கு தொடர்ந்த அவரது மனைவி மாதம் 10 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என நீதிமன்றத்தின் உதவியை நாடினார். அவரது இந்த விவாகரத்து வழக்கை உறுதிசெய்த நீதிமன்றம் :
அவரது மனைவிக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், குழந்தைக்கு 80 ஆயிரம் ரூபாய் என மாதம் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் முகமது ஷமி அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த முடிவினை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த அவரது மனைவி மீண்டும் உயர் நீதிமன்றத்தின் உதவியை நாடினார்.
இதையும் படிங்க : தோனியோட அந்த பெருமையை சஞ்சு சம்சனால் காப்பாற்ற முடியும்.. சி.எஸ்.கே வின் முடிவு சரிதான் – ஆகாஷ் சோப்ரா கருத்து
இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அவர்களின் பராமரிப்பு தொகைக்காக மாதம் 4 லட்சம் ரூபாய் வழங்க முகமது ஷமிக்கு உத்தரவிட்டுள்ளது. அதில் அவரது மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய், குழந்தைக்கு இரண்டு லட்ச ரூபாய் என நான்கு லட்ச ரூபாய் மாத மாதம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



