இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது ஆரம்பித்ததில் இருந்து சுப்மன் கில் பற்றிய பலரும் பேசி வருகின்றனர். ஏனெனில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள அவரது செயல்பாடு இந்த தொடரில் எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்து வரும் வேளையில் அவர் தனது பேட்டால் விமர்சகர்களுக்கு பதிலளித்து வருகிறார்.
தோனியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில் :
அந்த வகையில் ஏற்கனவே லீட்ஸ் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 147 ரன்கள் குவித்த அவர் தற்போது பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் 269 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 161 ரன்களையும் குவித்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
அதுமட்டும் இன்றி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியின் நான்காவது இடத்திற்கு சரியான தேர்வு நான் தான் என்பதையும் அவர் தனது பேட்டிங்கின் மூலம் நிரூபித்துள்ளார். ஏற்கனவே நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டியிகளிலேயே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள சுப்மன் கில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ் தோனியின் டெஸ்ட் ரெக்கார்ட் ஒன்றையும் முறியடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் தோனி முதல் இடத்தில் இருக்கிறார். அந்த வகையில் ஏற்கனவே தோனி டெஸ்ட் கேப்டனாக இருக்கும்போது ஒரு இன்னிங்சில் 6 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 8 சிக்சர்களை விளாசியுள்ள அவர் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். அதுமட்டும் இன்றி ஏற்கனவே ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா (13) மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (12) ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் சுப்மன் கில் (11) உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சுப்மன் கில் அப்படி ஆடுறத பாக்கும்போது விராட்டை பாத்த மாதிரியே இருக்கு – ஜோனாதன் டிராட் கருத்து
இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ள வேளையில் 146 ரன்கள் சராசரியுடன் 585 ரன்களை குவித்து வியக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.