சுப்மன் கில் அப்படி ஆடுறத பாக்கும்போது விராட்டை பாத்த மாதிரியே இருக்கு – ஜோனாதன் டிராட் கருத்து

Jonathan Trott
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி சார்பாக 5 சதங்கள் அடிக்கப்பட்டாலும் இந்திய அணியானது தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

விராட் கோலியை போன்றே சுப்மன் கில் ஆடுறாரு : ஜோனாதன் டிராட்

அதன்பிறகு தற்போது எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் இந்த தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை அடையும் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் 147 ரன்கள் குவித்த கேப்டன் சுப்மன் கில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் 269 ரன்களை குவித்த அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது 161 ரன்களை குவித்து ஒட்டுமொத்தமாக 430 ரன்களை குவித்துள்ளார்.

இதன்மூலம் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்திய அவர் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலேயே 146 ரன்கள் சராசரியுடன் 585 ரன்கள் குவித்து வியக்க வைத்துள்ளார். இந்நிலையில் சுப்மன் கில் இந்த தொடரில் விளையாடி வருவதை பார்க்கும் போது முன்னாள் வீரரான விராட் கோலியை பார்ப்பது போன்று இருப்பதாகவும் அவரது நான்காவது இடத்திற்கு சரியான கார்பன் காபி சுப்மன் கில் தான் என்று தோன்றுவதாகவும் அவர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : முதல் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் இரண்டாவது போட்டியின் போது நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறேன். சுப்மன் கில் நான்காவது இடத்தில் இறங்கி அற்புதமாக விளையாடி வருகிறார். அவர் விளையாடும் விதத்தை பார்க்கும் போது விராட் கோலி விளையாடுவதை போன்று அப்படியே இருக்கிறது.

இதையும் படிங்க : எம்.எஸ் தோனியின் சாதனையை சேனா நாடுகளில் முறியடித்து ரிஷப் பண்ட் அசத்தல் – விவரம் இதோ

இன்னும் எதிர்காலத்தில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். சுப்மன் கில் ஆட்டத்தில் செட்டாகிவிட்டால் அவர் மிகப்பெரிய சிக்சர்களையும் எளிமையாக அடிக்கிறார் என ஜோனாதன் டிராட் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement