எம்.எஸ் தோனியின் மாபெரும் சாதனையை நேற்று தகர்த்த சுப்மன் கில் – விவரம் இதோ

Shubman Gill and MS Dhoni
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் மிகப் பிரமாதமான ஆட்டம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 170 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது மூன்றாவது வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 110 பந்துகளை சந்தித்து 22 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 154 ரன்கள் குவித்து அசத்தினார்.

எம்.எஸ் தோனியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில் :

அவரது இந்த பிரமாதமான ஆட்டம் காரணமாக இந்திய அணி முதல் முதலில் விளையாடி 402 ரன்களை குவிக்க பின்னர் 403 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 232 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் அவர் அடித்த சதத்தின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை சுப்மன் கில் நிகழ்த்தினார்.

- Advertisement -

அதோடு இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஒன்பதாவது சதத்தை பதிவு செய்த சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்து மூன்றாவது இந்திய வீரராக ஒரு முக்கிய மைல்கல் சாதனையை இந்திய மண்ணில் நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் அவர் அடித்த 154 ரன்கள் மூலம் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை பூர்த்தி செய்த அவர் அந்த 1000 ரன்களை 954 பந்துகளில் பூர்த்தி செய்து ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை இந்தியாவில் அதிவேகமாக அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இவருக்கு முன்னதாக இந்திய மண்ணில் 1000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் விரைவாக அடித்த வீரராக ஹார்டிக் பாண்டியா 857 பந்துகளுடன் அடித்து முதலிடத்திலும் அவருக்கு அடுத்து கேதார் ஜாதவ் 936 பந்துகளுடன் அடித்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியின் மேலும் ஒரு சாதனையை சமன் செய்து அசத்திய சுப்மன் கில் – விவரம் இதோ

இவர்கள் இருவருக்கு அடுத்து 954 பந்துகளில் 1000 ரன்களை குவித்து சுப்மன் கில் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்து மகேந்திர சிங் தோனி வெறும் ஒரு பந்து வித்தியாசத்தில் 955 பந்துகளில் இந்திய மண்ணில் தனது முதல் 1000 ரன்களை பதிவு செய்து தற்போது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement