விராட் கோலியின் மேலும் ஒரு சாதனையை சமன் செய்து அசத்திய சுப்மன் கில் – விவரம் இதோ

Shubman Gill and Kohli
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. தரம்சாலா நகரில் நடைபெற்ற போட்டியின் போது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி நேற்று லக்னா நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 170 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.

விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில் :

இந்த தொடரின் முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்ற சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார். அதேபோன்று நேற்று லக்னா நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 110 பந்துகளை சந்தித்த அவர் 22 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 154 ரன்கள் குவித்திருந்தார். இந்த போட்டியிலும் அவரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றதால் இந்த இரண்டாவது போட்டியிலும் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் பெற்ற ஆட்டநாயகன் விருதின் மூலம் இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலியின் மேலும் ஒரு சாதனையை சுப்மன் கில் சமன் செய்து அசத்தியுள்ளார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் சுப்மன் கில் சமன் செய்த சாதனை யாதெனில் :

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதினை வென்ற வீரராக விராட் கோலி 9 ஆட்டநாயகன் விருதுகளுடன் முதலிடத்தில் இருந்தார். இவ்வேளையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதினை வென்றதன் மூலம் தற்போது 2022 ஜனவரி மாதத்திற்கு பிறகு தன்னுடைய ஒன்பதாவது ஆட்டநாயகன் விருதினை ஒருநாள் போட்டிகளில் பெற்று விராட் கோலியின் அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இப்படி ஒரு தப்பை செய்ஞ்சா தோல்வி கண்டிப்பா வரும்.. இந்திய அணியிடம் வீழ்ந்தது குறித்து – ஹஸ்மத்துல்லா ஷஹிதி

அவர்கள் இருவருக்கு அடுத்து சாய் ஹோப் மற்றும் டிராவிஸ் ஆகியோர் தலா 8 ஆட்டநாயகன் விருதுகளுடனும் அதற்கடுத்து குஷால் மெண்டிஸ், சரீத் அசலங்கா, பிரண்டன் மெக்குல்லன் ஆகியோர் 7 ஆட்டநாயகன் விருதுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement