பாகிஸ்தான் முகமது யூசுப்பின் 19 வருட சாதனையை உடைக்கப் போகும் சுப்மன் கில்.. இங்கிலாந்தில் காத்திருக்கும் வரலாறு 

Shuman Gill
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரில் 3 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. இதை அடுத்து நான்காவது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் இருக்கும் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் துவங்குகிறது.

அந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராகி வருகிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறையில் சுப்மன் கில் மீண்டும் அசத்துவது அவசியமாகிறது. ஏனெனில் இதற்கு முன் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடத சுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்கலாமா என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள்.

- Advertisement -

19 வருட சாதனை:

ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த அவர் 2வது போட்டியில் 430 ரன்கள் குவித்தார். அதனால் பல சாதனைகளைப் புரிந்த கில் இந்தியாவை வெற்றி பெற வைத்து இங்கிலாந்துக்கும் தன்னை விமர்சித்தவர்களுக்கும் தக்க பதிலடி கொடுத்தார். இருப்பினும் 3வது போட்டியில் அவர் அரை சதத்தை கூட அடிக்காதது இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றவில்லை.

எனவே 4வது போட்டியில் மீண்டும் சுப்மன் கில் பெரிய ரன்களைக் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைக்கத் தயாராகி வருகிறார். அந்தப் போட்டியில் இன்னும் 25 ரன்களை அடித்தால் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த ஆசிய பேட்ஸ்மேன் வரலாற்றுச் சாதனையை கில் படைப்பார். இதுவரை அவர் 3 போட்டிகளில் 607* ரன்களை 101.16 என்ற சராசரியில் குவித்துள்ளார்.

- Advertisement -

மான்செஸ்டரில் வரலாறு நிகழுமா:

இதற்கு முன் 2006ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் 4 போட்டிகளில் 631 ரன்களை 90.14 என்ற சராசரியில் குவித்துள்ளார். அதனால் இங்கிலாந்தில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த ஆசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையை யூசுப் தன்வசம் வைத்துள்ளார். அந்த சாதனையை 4வது போட்டியில் கில் உடைத்து புதிய சாதனை படைக்க பிரகாச வாய்ப்புகள் இருக்கிறது.

இதையும் படிங்க: இந்திய அணிக்கு திரும்பும் முனைப்புடன் முக்கிய முடிவை கையிலெடுத்த முகமது ஷமி – விவரம் இதோ

இது போக ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா ஒருமுறை கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் வென்றதில்லை. எனவே இம்முறை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி பர்மிங்காம் போலவே மான்செஸ்டர் மைதானத்திலும் வரலாற்று வெற்றியை பெற முயற்சிக்க உள்ளது. அதைச் செய்து இந்திய அணி தொடரை சமன் செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement