- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சினின் சாதனையை சமன் செய்ய நெருங்கும் சுப்மன் கில்.. அசத்தலான ஆட்டம் – விவரம் இதோ

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று நியூ சண்டிகர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து போட்டியின் முதல் நாளான நேற்று 3 விக்கெட்டுகளை இழந்து 368 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக துவக்க வீரரான கே.எல் ராகுல் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். மேலும் சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அரைசதம் கடந்திருந்தனர்.

சச்சினின் சாதனையை நெருங்கும் சுப்மன் கில் :

இவ்வேளையில் இந்த போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றினை டெஸ்ட் போட்டிகளில் நெருங்கியுள்ளார். அப்படி சுப்மன் கில் சமன் செய்ய நெருங்கும் சாதனை யாதெனில் :

- Advertisement -

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்று கடந்த சில தொடர்களாக விளையாடி வரும் சுப்மன் கில் நேற்று அடித்த சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 11-வது சதத்தை பதிவு செய்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக மாறிய பிறகு அவர் விளையாடிய 15 இன்னிங்ஸ்களில் நேற்று ஆறாவது சதத்தை கேப்டனாக விளாசியுள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் தற்போது அவர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்களை கேப்டனாக அடித்த வீரராக விராட் கோலி 20 சதங்களுடன் முதலிடத்திலும், சுனில் கவாஸ்கர் 11 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், அசாருதீன் ஒன்பது சதங்களுடன் மூன்றாவது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் ஏழு சதத்துடன் நான்காவது இடத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியாவுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏன்? – விவரம் இதோ

இவ்வேளையில் தற்போது சுப்மன் கில் ஆறு சதங்களுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் இனிவரும் டெஸ்ட் தொடர்களில் ஒரு சதத்தை அடிக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வார். அதோடு மட்டுமின்றி இனிவரும் பல ஆண்டுகள் சுப்மன் கில்லே டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பார் என்பதனால் இந்த சாதனை பட்டியலில் அவர் விராட் கோலியை நெருங்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -