
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது தரம்சாலா நகரில் ஜூன் 13-ஆம் தேதியான இன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக மழை பெய்ததனால் போட்டி பல மணி நேரம் தடைபட்டது. இதனால் இந்த ஒருநாள் போட்டியானது 25 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. பின்னர் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் 102 ரன்களையும், கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 27 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 66 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி அழைத்துச்சென்றார். அவருக்கு அடுத்து கே.எல் ராகுல் 39 ரன்கள் குவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சுப்மன் கில் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதோடு சேர்த்து மாபெரும் சாதனை ஒன்றினை ஒருநாள் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது அவர் 47 ரன்களை எட்டிய போது ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களை பூர்த்தி செய்தார். இதன்மூலம் தனது 62 சர்வதேச ஒருநாள் போட்டியில் 3000 ரன்களை தொட்டு குறைந்த போட்டிகளில் 3000 ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : ஷாஹித் அப்ரிடிக்கு அடுத்து இந்திய அணிக்கு எதிராக மாபெரும் சதானையை நிகழ்த்திய – ரஹ்மனுல்லா குர்பாஸ்
இதற்கு முன்னதாக ஷிகர் தவான் இந்திய அணிக்காக தனது 72-ஆவது இன்னிங்ஸ்சில் 3000 ரன்களை அடித்ததே இந்திய வீரரால் அடிக்கப்பட்ட அதிவேக 3000 ரன்களாக இருந்த வேளையில் அவரது சாதனையை தற்போது சுப்மன் கில் முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒட்டுமொத்தமாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையுயைம் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.