ஷாஹித் அப்ரிடிக்கு அடுத்து இந்திய அணிக்கு எதிராக மாபெரும் சதானையை நிகழ்த்திய – ரஹ்மனுல்லா குர்பாஸ்

Rahmanullah Gurbaz
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தது. அதற்கடுத்து தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்று விளையாடி வருகிறது.

ரஹ்மனுல்லா குர்பாஸ் நிகழ்த்திய சாதனை :

அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது ஜூன் 13-ஆம் தேதி இன்று தரம்சாலா நகரில் துவங்கியது. இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களை குவித்தது. பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணியானது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் 51 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் என 102 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் அவர் அடித்த சதத்தின் மூலம் முன்னாள் பாகிஸ்தான் வீரரான ஷாஹித் அப்ரிடிக்கு அடுத்து இரண்டாவது வீரராக இந்திய அணிக்கு எதிராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இதையும் படிங்க : 25 ஓவர்களாக குறைக்கப்பட போட்டி.. 2 வீரர்களுக்கு அறிமுகம் வாய்ப்பு – இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரராக ஷாஹித் அப்ரிடி 45 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து இன்றைய போட்டியில் 48 பந்துகளை சந்தித்து சதம் அடித்த குர்பாஸ் இந்திய அணிக்கு எதிராக 50 பந்துகளுக்குள் சதம் அடித்த இரண்டாவது சர்வதேச வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement