25 ஓவர்களாக குறைக்கப்பட போட்டி.. 2 வீரர்களுக்கு அறிமுகம் வாய்ப்பு – இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

IND vs AFG
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூன் 13-ஆம் தேதியான இன்று தரம்சாலா நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மழை காரணமாக இந்த போட்டி நீண்ட நேர தாமதத்திற்கு பிறகு துவங்கியதால் போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இந்திய ஒருநாள் அணிக்கு அறிமுகமான 2 வீரர்கள் :

அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் மற்றும் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்ஷ் துபே ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இவ்வேளையில் அவர்கள் இருவருக்கும் இன்றைய போட்டியில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களை தவிர்த்து பிரின்ஸ் யாதவிற்கு இந்த போட்டியில் அறிமுக வாய்ப்பு கிடைக்கவில்லை. மற்றபடி ஜெய்ஸ்வால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கும் இந்த போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது இந்த முதலாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் என்பது உறுதி. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : இஷான் கிஷனை பார்த்து ரிஷப் பண்ட் இந்த விடயத்தை கத்துக்கனும் – இர்பான் பதான் கருத்து

1) சுப்மன் கில், 2) ரோஹித் சர்மா, 3) கே.எல் ராகுல், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) இஷான் கிஷன், 6) வாஷிங்டன் சுந்தர், 7) நிதீஷ் ரெட்டி, 8) ஹர்ஷ் துபே, 9) குர்னூர் பிரார், 10) அர்ஷ்தீப் சிங், 11) பிரசித் கிருஷ்ணா.

Advertisement