இஷான் கிஷனை பார்த்து ரிஷப் பண்ட் இந்த விடயத்தை கத்துக்கனும் – இர்பான் பதான் கருத்து

Irfan Pathan
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்போது இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல் ராகுலும், பேக்கப் விக்கெட் கீப்பராக இஷான் கிஷனும் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் ரிஷப் பண்டிற்கு இந்த ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் அணியில் இடம் பிடிக்காத இஷான் கிஷனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரிஷப் பண்ட்டை முற்றிலுமாக புறக்கணிக்க கூடாது : இர்பான் பதான்

ஏற்கனவே டி20 போட்டிகளில் ஓரம் கட்டப்பட்ட பண்ட் தற்போது ஒருநாள் போட்டியிலிருந்தும் ஓரம் கட்டப்பட்டதை இந்த தேர்வு காட்டுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2027 உலக கோப்பை தொடரில் கே.எல் ராகுலே முதன்மை விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்பதாலும் அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பர் தேவைப்பட்டால் இஷான் கிஷன் அணியில் இருப்பதாலும் ரிஷப் பண்ட் இனி ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் ரிஷப் பண்ட்டை ஒருநாள் போட்டியில் இருந்து முற்றிலுமாக புறக்கணிக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒருநாள் போட்டிகளில் கே.எல் ராகுல் தான் தற்போது முதல் தேர்வாக இருக்கிறார். ஏனெனில் அவரால் ஐந்து மற்றும் ஆறு இடங்களில் சிறப்பாக விளையாட முடிகிறது. அதேபோன்று அணிக்கு ஏற்றார் போல் எந்த இடத்தில் களம் இறக்கினாலும் அவரால் சிறப்பாக விளையாட முடியாது.

தற்போது மாற்று வீரராக இஷான் கிஷன் வந்துள்ளதால் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் பலப்பட்டுள்ளார்கள். அதே வேளையில் இந்த விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பண்ட்டையும் பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் அவர் ஒரு திறமையான வீரர். தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்டு விட்டாலும் இஷான் கிஷனை பார்த்து அவர் கம்பேக் கொடுப்பதை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இஷான் கிஷன் ஆறு மாதத்திற்கு முன்னதாக இந்திய அணியில் இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : 3 ஆவது இந்திய விக்கெட் கீப்பராக ஒருநாள் போட்டிகளில் கே.எல் ராகுல் – நிகழ்த்தவுள்ள சாதனை

ஆனால் உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடி சையத் முஷ்டாக் அலி தொடரில் ஜார்கண்ட் அணியை சாம்பியன்ஷிப் பட்டத்திற்கு கொண்டு சென்றதால் மீண்டும் டி20 அணியில் இடம் பிடித்து தற்போது நிரந்தர வீரராக மாறியுள்ளார். அதேபோன்று ரிஷப் பண்ட் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஒருநாள் போட்டியில் கம்பேக் கொடுக்க வேண்டும் என இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement