கேப்டனாக அறிமுகமாகிய 4 இன்னிங்ஸ்களில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை தகர்த்த – சுப்மன் கில்

Gill and Kohli
- Advertisement -

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்ததால் அவருக்கு பதிலாக புதிய இந்திய டெஸ்ட் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். அப்படி அவரது தலைமையில் தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

கேப்டனாக விராட் கோலியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில் :

இதன் காரணமாக இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனாலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.

- Advertisement -

இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 387 பந்துகளை சந்தித்த அவர் 30 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 269 ரன்கள் குவித்த வேளையில் தற்போது இரண்டாவது இன்னிங்சிலும் அரைசதம் கடந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்திருந்த அவர் இரண்டாவது போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேப்டனாக அறிமுகமாகி இதுவரை 4 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடியுள்ள அவர் முன்னாள் இந்திய கேப்டனான விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் சுப்மன் கில் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிய தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக விராட் கோலி 449 ரன்கள் உடன் முதலிடத்தில் இருந்தார். கடந்த 2014-15 இல் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தனது முதல் தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் விளையாடி 449 ரன்கள் குவித்திருந்தார்.

இதையும் படிங்க : சேவாக் மற்றும் முரளி விஜய்யின் சாதனையை முறியடித்து அசத்திய கே.எல் ராகுல் – விவரம் இதோ

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வரும் அறிமுக கேப்டன் சுப்மன் கில் இரண்டாவது போட்டி முடிவதற்குள் கிட்டத்தட்ட 500 ரன்களை குவித்துவிட்டார். மேலும் இந்த தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ள வேளையில் நிச்சயம் அவர் 800 முதல் 1000 ரன்களை கூட அடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement