சேவாக் மற்றும் முரளி விஜய்யின் சாதனையை முறியடித்து அசத்திய கே.எல் ராகுல் – விவரம் இதோ

KL Rahul
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியானது தற்போது வலுவான நிலையில் உள்ளது. இந்த போட்டியில் ஏற்கனவே நடைபெற்ற முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 587 ரன்களை குவித்து அசத்தியது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269 ரன்களை குவித்து அசத்தினார்.

கே.எல் ராகுல் நிகழ்த்திய அசத்தல் சாதனை :

அதன்பிறகு தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 407 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது : நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 64 ரன்கள் குவித்திருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக 244 ரன்கள் முன்னிலையுடன் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுல் 84 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இந்த இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பாக விளையாடிய சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் அரை சதத்துடன் ஆட்டம் இழந்தார். இருந்தாலும் அவர் அடித்த இந்த அரை சதத்தின் மூலம் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் முரளி விஜய் ஆகியோரது சாதனையை அவர் முறியடித்துள்ளார். அந்த வகையில் கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இதுவரை சேனா நாடுகள் என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக அதிகமுறை அரை சதங்கள் அடித்த வீரர்களாக சேவாக் மற்றும் முரளி விஜய் ஆகியோர் முதலிடத்தில் இருந்தனர். அவர்கள் இருவருமே சேனா நாடுகளில் ஒன்பது முறை அரைசதம் கடந்துள்ளனர்.

இதையும் படிங்க : எவ்ளோ பெரிய டார்கெட்டா இருந்தாலும் சரி.. எங்க வேலை இதுமட்டும் தான் – சவால் விட்ட ஹாரி ப்ரூக்

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த கே.எல் ராகுல் சேனா நாடுகளில் இந்திய துவக்க வீரராக பத்து முறை அரை சதங்களை குவித்து அவர்கள் இருவரையும் பின்னிக்கு தள்ளியுள்ளார். இந்த பட்டியலில் சுனில் கவாஸ்கர் 19 முறை அரைசதம் அடித்து முதல் இடத்தில் இருக்கும் வேளையில் அவருக்கு அடுத்து கே.எல் ராகுல் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement