எவ்ளோ பெரிய டார்கெட்டா இருந்தாலும் சரி.. எங்க வேலை இதுமட்டும் தான் – சவால் விட்ட ஹாரி ப்ரூக்

Harry Brook
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி நிர்ணயித்த 371 ரன்கள் என்கிற இலக்கினை இங்கிலாந்து அணியானது மிகச் சிறப்பாக சேசிங் செய்து அசத்தியது. அதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அதே போன்ற ஒரு பெரிய இலக்கினை சேசிங் செய்யும் நிலையே ஏற்படும் வகையில் தற்போது இரண்டாவது போட்டியும் நகர்ந்து வருகிறது.

எவ்ளோ டார்கெட் இருந்தாலும் அடிப்போம் : ஹாரி ப்ரூக்

ஏனெனில் கடந்த ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 587 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்ஸில் 407 ரன்களை குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 180 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 64 ரன்கள் எடுத்துள்ள வேளையில் இன்று 244 ரன்கள் என்கிற பிரம்மாண்ட முன்னிலையுடன் நான்காம் நாள் ஆட்டத்தை விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி இன்னும் 150 ரன்கள் அடித்தால் கூட 400 ரன்கள் எட்டி விடும் என்பதனால் இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி 400-க்கும் மேற்பட்ட ரன்களை துரத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் முடிவு குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எவ்வளவு பெரிய இலக்கையும் எங்களால் எட்ட முடியும் என்பது உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். இந்திய அணி எவ்வளவு ஸ்கோரை நிர்ணயித்தாலும் அதனை எட்டவே நாங்கள் முயற்சி செய்வோம்.

இதையும் படிங்க : 137/0 டூ 171/9.. 4.4 ஓவரில் 9 விக்கெட்ஸ்.. மகளிர் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த இந்தியா.. கடைசியில் பரிதாபம்

இந்திய அணி ஒருவேளை விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களுக்கு அழுத்தம் கொடுத்தால் அதன்பிறகு பார்க்கலாம். இல்லையெனில் நிச்சயம் இந்த போட்டியில் எவ்வளவு பெரிய டார்கெட்டையும் நோக்கி செல்வோம் என ஹாரி ப்ரூக் இந்திய அணியை எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement