137/0 டூ 171/9.. 4.4 ஓவரில் 9 விக்கெட்ஸ்.. மகளிர் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த இந்தியா.. கடைசியில் பரிதாபம்

IND vs ENG W
- Advertisement -

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் 4வது போட்டி ஜூலை நான்காம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 11.35 மணிக்கு துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீராங்கனைகள் சோபியா டுங்லி – டேனியல் வைட் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 15.1 ஓவர்கள் வரை அபாரமாக விளையாடிய அந்த ஜோடி 137/0 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்துக்கு அற்புதமான துவக்கத்தைக் கொடுத்தது.

- Advertisement -

25 பந்தில் 9 விக்கெட்ஸ்:

அப்போது சோபியாவை 75 (53) ரன்னில் தீப்தி சர்மா அவுட்டாக்கினார். அடுத்ததாக வந்த அலிஸ் கேப்சியை 2 ரன்னில் காலி செய்த அருந்ததி ரெட்டி மறுபுறம் அதிரடி காட்டிய டேனியல் வைட்டை 66 (42) ரன்னில் அவுட்டாக்கினார். அதே போல மிடில் ஆர்டரில் எமி ஜோன்ஸ் 0, கேப்டன் பியூமோண்ட் 2, பைஜ் ஃஸ்கோபீல்ட் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

சோபி ஃஎக்லெஸ்டன் 10, லாரன் ஃபில்லர் 0 ரன்களில் தீப்தி சர்மா சுழலில் அடுத்தடுத்து அவுட்டானார்கள். அதனால் 200 ரன்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்தை 20 ஓவரில் 171/9 ரன்களுக்கு இந்தியா கட்டுப்படுத்தியது. குறிப்பாக 15.1 ஓவரில் 137/0 என்ற வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்தை அடுத்த 4.4 ஓவரில் 25 பந்துகளில் 9 விக்கெட்டுகளை எடுத்த இந்தியா 171க்கு சுருட்டியது.

- Advertisement -

இந்தியாவின் உலக சாதனை:

இதன் வாயிலாக அனைத்து விதமான சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த பந்துகளில் 9 விக்கெட்டுகளை எடுத்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. வேறு எந்த மகளிர் அணியும் 25 பந்துகளில் 9 விக்கெட்டுகள் எடுத்ததில்லை. அந்தளவுக்கு அசத்திய இந்தியாவுக்கு அதிகபட்சமாக அருந்ததி ரெட்டி 3, தீப்தி சர்மா 3, ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு 85 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த நல்ல துவக்கத்தைக் கொடுத்த ஷபாலி வர்மா 47 (25) ரன்களை விளாசி அவுட்டானார். அடுத்து வந்த ஜெமிமா 20 (15) ரன்னில் அவுட்டானார். மறுபுறம் அரை சதமடித்தாலும் மெதுவாக விளையாடிய மந்தனா 56 (49) ரன்னில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த ரிச்சா கோஸ் 7 (10) ரன்னில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து அணியை பரிதாப சாதனைக்கு தள்ளிய இந்திய பவுலர்கள்.. இதுதான் முதல்முறை – விவரம் இதோ

இறுதியில் வெற்றிக்கு போராடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 23 (17) ரன்கள் அடித்த போதிலும் கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது அவுட்டானார். அதனால் 20 ஓவரில் 166/5 ரன்களை மட்டுமே எடுத்த இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி பந்தில் பரிதமாக தோற்றது. அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக லாரன்ஸ் ஃபில்லர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Advertisement