பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இங்கிலாந்து அணி நிகழ்த்திய பரிதாப சாதனை :
அதன் காரணமாக தற்போதைய நிலையில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.
கடந்த ஜூலை 2-ஆம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கிய இந்த போட்டியானது முதல் மூன்று நாட்களை நிறைவு செய்துள்ள வேளையில் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 587 ரன்களை குவித்து அசத்தியது. பின்னர் அடுத்ததாக தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 407 ரன்களை மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக 180 ரன்கள் என்கிற வலுவான முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 64 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக 244 ரன்கள் முன்னிலையுடன் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்தாத ஒரு பரிதாப சாதனையை இந்திய பவுலர்களால் சந்திக்க நேர்ந்தது. அந்த வகையில் இங்கிலாந்து அணி படைத்த பரிதாப சாதனை யாதெனில் : இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஆறு வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு அடுத்து 2 ஆவது இந்திய வீரராக முகமது சிராஜ் நிகழ்த்திய மாபெரும் சாதனை – விவரம் இதோ
இதற்கு முன்னதாக இப்படி ஒரே இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் 6 வீரர்கள் டக் அவுட்டானது கிடையாது. அதிகபட்சமாக ஐந்து வீரர்கள் நான்கு முறை ஒரே இன்னிங்சில் டக் அவுட்டாகியிருந்த வேளையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே நேற்றுதான் முதல் முறையாக இங்கிலாந்து அணியின் ஆறு வீரர்கள் ஒரே இன்னிங்சில் டக் அவுட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.