அவருடன் எனக்கு போட்டி கிடையாது. எனக்கு பதிலாக அவரே இறங்கட்டும் – பெரிய மனசை காட்டிய கில்

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அடங்குவதால் இந்த தொடரில் இந்திய அணி வெல்ல முனைப்புக் காட்டும்.

Ind-1

- Advertisement -

மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கியதில் இருந்து எந்த ஒரு தொடரையும் இழக்காமல் இந்திய அணி விளையாடி வருவதால் அதே உத்வேகத்தை இந்த தொடரிலும் காட்டும் என்று நம்பலாம். இந்நிலையில் தற்போது மாயங்க் அகர்வாலுடன் காயமடைந்த ரோகித் சர்மாவிற்கு பதிலாக யார் துவக்க வீரராக இறங்குவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் ப்ரித்வி ஷா துவக்க வீரராக களம் இறங்கினார்.

ஆனாலும் ஷா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில் அந்த போட்டியில் கில்லும் டக் அவுட் ஆகி இருப்பதால் இருவரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இவர்கள் இருவரில் ஒருவருக்கு நிச்சயம் துவக்க வீரராக களம் இறங்கிய இந்திய அணி வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் இருவரும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

Gill 2

இந்நிலையில் தற்போது கில் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : துவக்க வீரராக களமிறங்குவது எனக்கும் ஷாவுக்கும் எந்த போட்டியும் கிடையாது. நன்றாக விளையாடினால் அவரே துவக்க வீரராக களமிறங்கட்டும். ஏனெனில் அணியின் ஆரோக்கியம் தான் முக்கியம் நான் துவக்க வீரர்கள் இறங்குவதில் புதியவன். ஏனெனில் என்னுடைய ஆட்டம் மிடில் ஆர்டரில் தான் தொடர்ந்து வருகிறது.

Shaw

உள்ளூர் போட்டிகளிலும் சரி, 19 வயதுக்கு உட்பட்டோர் அணியிலும் சரி விக்கெட்டுகள் விழுந்தவுடன் நான்காவது வரிசையில் நான் இறங்கி நிதானமாக விளையாடி அணியை கொண்டு செல்வேன். ஆனால் தற்போது நியூசிலாந்து தொடரில் இந்திய அணிக்காக நான் துவக்க வீரராக இறங்கிய போதுதான் புதிய சவால்களை எதிர்கொண்டேன். இருப்பினும் அணி நிர்வாகம் என்னை துவக்க வீரராக களமிறங்க கேட்டுக் கொண்டால் நிச்சயம் களமிறங்க நான் தயார் என்றும் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement