
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடர்பானது வரும் நவம்பர் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நகரில் துவங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்காக தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ரோகித் சர்மா இந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்பதனால் இந்திய அணியின் துவக்க வீரர்கள் யார்? எந்தெந்த வீரர்கள் பிலேங் லெவனில் இடம் பிடிப்பார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.
இவ்வேளையில் தொடர்ச்சியாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் காயமடைந்து வரும் தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே கே.எல் ராகுல், சர்பராஸ் தான் ஆகியோர் பயிற்சியின்போது காயமடைந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில்லுக்கும் இடதுகை பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது காயத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதற்காக எடுக்கப்பட்ட பரிசோதனையின் போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் அதிகாரவபூர்வமாக விலகுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவர் அணிக்கு திரும்புவார் என்பதால் முதல் போட்டியில் அவருக்கு பதிலாக மாற்றுவீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அதான் உங்க வேலை முடிஞ்சுதுல்ல.. நாட்டுக்காக நீங்க இதை செய்யனும்.. ரோஹித்துக்கு கங்குலி அட்வைஸ்
ஏற்கனவே ரோகித் சர்மா இந்த முதலாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் தற்போது சுப்மன் கில்லும் விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.