சாரா டெண்டுல்கர், சாரா அலி கானுடன் காதலா? கிசுகிசுக்கள் – 3 வருடம் சிங்கிளாக இருப்பது சுப்மன் கில் பதில்

Shubman Gill
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார். 20225 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்வதற்கு உதவிய அவர் தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் கேப்டனாக விளையாடி வருகிறார். அவரது தலைமையில் 8 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்றுள்ள குஜராத் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது.

முன்னதாக இந்தியாவில் சினிமா நடிகர்கள் மற்றும் கிரிக்கெட்டில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் பற்றி கிசுகிசுக்கள் பேசப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் 25 வயதாகும் இளம் வீரரான சுப்மன் கில் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டல்கரை காதலிப்பதாக ரசிகர்கள் பலமுறை பேசியுள்ளனர். அதற்குத் தகுந்தார் போல் கில் விளையாடும் போட்டிகளை சாரா டெண்டல்கர் பலமுறை நேராக வந்து பார்த்துள்ளார்.

- Advertisement -

காதல் இல்லைங்க:

அதற்கு இந்திய அணியை பார்க்கத்தான் சாரா வந்தாரே தவிர கில்லை பார்க்க வரவில்லை என்று மற்றொரு தரப்பு ரசிகர்கள் பதிலடியும் கொடுத்தனர். அது ஒரு புறமிருக்க பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் காதல் செய்வதாகவும் மற்றொரு செய்தி காணப்படுகிறது. இந்நிலையில் அவை அனைத்துமே வதந்திகள் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

அதற்கு கடந்த 3 வருடங்களாக தாம் சிங்கிளாக இருப்பதே சாட்சி என்று தெரிவிக்கும் அவர் தம்முடைய மொத்த கவனமும் கிரிக்கெட்டில் விளையாடி சாதிப்பதில் இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நான் சிங்கிளாக இருந்து வருகிறேன். என்னை வெவ்வேறு நபர்களுடன் தொடர்புப்படுத்தி நிறைய வதந்திகள் மற்றும் யூகங்கள் இருக்கின்றன”

- Advertisement -

மறுக்கும் கில்:

“அவை அனைத்தும் அபத்தமானது அல்லது அது போன்ற நபரை எனது வாழ்நாளில் இன்னும் பார்த்ததில்லை. ஆனால் நான் அந்த குறிப்பிட்ட நபருடன் தொடர்பில் இருக்கிறேன், இவருடன் இருக்கிறேன் என்ற வதந்திகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறேன். என்னுடைய தொழில்முறையில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்”

இதையும் படிங்க: இன்னைக்கு விராட் கோலி பாஸ் யாருன்னு கேஎல் ராகுலுக்கு பதிலடி காட்டப் போறாரு.. சஞ்சய் பங்கர் பேட்டி

“எனது வாழ்வில் வருடத்திற்கு 300 நாட்கள் ஒரு வருடம் இருக்கும் அளவுக்கு இடைவெளி கிடையாது. எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கும் என்னால் ஒருவருடன் இருக்க முடியாது அல்லது நேரத்தை முதலீடு செய்து ஒருவரிடம் தொடர்பில் இருக்க முடியாது” என்று கூறினார். மேலும் எந்த வதந்திகள் வந்தாலும் நாட்டுக்காகவும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடியவதில் மட்டுமே கவனம் இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement