கொல்கத்தா அணியில் நான் துவக்க வீரராக இறங்கினால் நான் யார் என்று நிரூபிப்பேன் – இளம்வீரர் சவால்

Gill 3

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ipl

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற சிறப்பான வீரராக அடுத்த தலைமுறையில் சுப்மான் கில் வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாக கருதப்படுகிறது. 19 வயதுக்குட்பட்ட அணியில் சிறப்பாக விளையாடி அசத்திய இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொல்கத்தா அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

எந்த ஒரு பந்து வீச்சாளருக்கு எதிராகவும் தயங்காமல் பயமின்றி அடித்து ஆடும் திறமையுள்ள கில்லுக்கு கடந்த சீசனில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பெரும்பாலான ஆட்டங்களில் பின்வரிசையில் இறங்கி சிறப்பாக விளையாடினார். அதனால் இம்முறை கொல்கத்தா அணியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் தற்போது இந்த தொடர் குறித்தும், தனது பேட்டிங் வரிசை குறித்தும் பேட்டி அளித்துள்ள கில் கூறுகையில் :

Gill

எனக்கு தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கொடுக்கப்பட்டால் நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு துவக்க வீரராக களம் இறங்குவேன். மேலும் நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது எந்த சூழ்நிலையில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டிய எண்ணம் மட்டுமே எனது மனதில் இருக்கும். அதனால் நான் பேட்டிங் செய்ய வரும் போது இயல்பாக ரன்களை விளாசி என் திறமையை நிரூபிப்பேன்.

- Advertisement -

எப்பொழுதும் என் மனதில் எந்த அணிக்காக விளையாடினாலும் அந்த அணிக்காக 100% எனது பங்களிப்பை கொடுத்து வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விளையாடுவேன் என்று கில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அசாத்தியமான திறமை கொண்ட கில் நிச்சயம் இந்த தொடரில் அசத்துவார் என்று பலரும் கணித்துள்ளனர்.

gill

ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள அவர் வாய்ப்பின்றி உட்கார வைக்கப் பட்டாலும் அவர் திறமையின் மீது இந்திய நிர்வாகம் நம்பிக்கை வைத்து தொடர்ந்து அவருக்கு அணியில் இடம் பிடித்து வருகிறது. நிச்சயம் இந்தியாவின் எதிர்கால சூப்பர் ஸ்டாராக அனைத்து வாய்ப்புகளும் இவருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.