
இந்திய அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான சுப்மன் கில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக டி20 போட்டிகளுக்கான துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் துணை கேப்டனாக நீடிப்பார் என்று பேசப்பட்டு வந்தது. அதோடு அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு சூரியகுமார் யாதவின் பதவி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மூன்று வகையான போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் சுப்மன் கில் மாறுவார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் தற்போது சுப்மன் கில் விடயத்தில் அனைத்துமே வேறு திசையில் சென்று கொண்டிருக்கிறது. ஏனெனில் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் துணை கேப்டன் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதோடு சேர்த்து அணியிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக டி20 போட்டிகளுக்கான துணை கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் யாதெனில் : அவர் சமீப காலமாகவே டி20 போட்டிகளில் மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு ஒரு அரைசதம் கூட அடிக்காமல் பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தார்.
இதன் காரணமாக டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் துவக்க வீரராக விளையாட இருக்கிறார். இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ஒரு புதிய முடிவை கையில் எடுத்து மொஹாலி மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் இப்படி தீவிர பயிற்சியை மேற்கொள்ள காரணம் யாதெனில் : இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி தனது திறமையை மீண்டும் நிரூபிக்கவும் எதிர்வரும் நியூசிலாந்து தொடருக்காக தயாராகும் வகையிலும் தான் இந்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 14 வயதிலேயே ஜனாதிபதி கையால் இந்தியாவின் உயரிய விருதை வாங்கிய சூர்யவன்சி.. விவரம் இதோ
அதோடு டி20 போட்டிகளில் தான் விட்ட இடத்தை மீண்டும் கேப்டனாக பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பயிற்சியினை அவர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.