சிராஜுக்கு பாடம் எடுத்த சுப்மன் கில்.. கட்டம் கட்டி கிராவ்லியை தூக்கிய.. அபார கேப்டன்ஷிப் விவரம் இதோ

Shubman Gill Captaincy 2
- Advertisement -

பர்மிங்கம் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜூலை இரண்டாம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 587 ரன்கள் குவித்து மிரட்டியது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை 407 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா 180 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 184*, ஹாரி ப்ரூக் 158 ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்கு முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா 427/6 ரன்கள் விளாசி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

அசத்தும் கில்:

அதிகபட்சமாக கேப்டன் கில் மீண்டும் சதமடித்து 161, ஜடேஜா 69*, ரிஷப் பண்ட் 65, ராகுல் 55 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் 608 என்ற இமாலய இலக்கை துரத்தும் இங்கிலாந்து நான்காவது நாளில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முன்னதாக இத்தொடருக்கு புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட சுப்மன் கில் ஏராளமான விமர்சனங்களை சந்தித்தார்.

குறிப்பாக கடந்த காலங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் பெரிய ரன்கள் குவித்திராத அவர் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்ற விமர்சனங்கள் வந்தன. ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 போட்டிகளில் சதம், இரட்டை சதம், 150+ ரன்கள் குவித்துள்ள அவர் தக்க பதிலடிக் கொடுத்துள்ளார். அதே போல நேற்றைய ஆட்டத்தின் மாலையில் இங்கிலாந்து துவக்க வீரர் ஜாக் கிராவ்லிக்கு எதிராக சிராஜ் பவுலிங் செய்தார்.

- Advertisement -

அபார கேப்டன்ஷிப்:

அப்போது தமக்கு குறிப்பிட்ட ஃபீல்டிங் வேண்டுமென்று சிராஜ் கேப்டன் கில்லிடம் கேட்டார். இது பற்றி சிராஜ் பேசியது பின்வருமாறு. “நான் அந்த இடத்தைப் பற்றி பேசுகிறேன். அங்கேயும் ஃபீல்டர் இருந்தார்” என்று கூறினார். அதை அமைதியாக கேட்ட கில் முதல் போட்டியை விட இப்போட்டியின் பிட்ச் வித்தியாசமாக இருப்பதால் சாதாரணமாகவே பவுலிங் செய்யுங்கள் போதும் என்று சிராஜிடம் சொன்னார்.

இது பற்றி கில் தெரிவித்தது பின்வருமாறு. “இங்கே கேட்ச் வரும். கடந்த போட்டியிலும் அவர் அதே வழியில் அவுட்டானார். இந்த பிட்ச் லீட்ஸ் விட வித்தியாசமாக இருக்கிறது. சாதாரண பந்தை வீசுங்கள்” என்று சொன்னார். அதை ஏற்றுக்கொண்ட சிராஜ் வீசினார். அடுத்த சில பந்துகளில் கில் சொன்ன அதே இடத்தில் கிராவ்லி கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதையும் படிங்க: உலகளவில் 6 ஆவது முறை.. இந்திய அணி சார்பாக முதல் முறை.. வரலாறு படைத்த சுப்மன் கில்லின் – இளம்படை

அப்போது “நான் தான் சொன்னேன்ல” என்ற வகையில் சுப்மன் கில் சைகை காட்டிக்கொண்டே சிராஜிடம் விக்கெட்டை கொண்டாடினார். அந்த வகையில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்த சிராஜிக்கு பாடம் எடுத்த கில் கேப்டனாகவும் அசத்தினார். அதனால் இந்தியாவை நீண்டகாலம் தலைமை தாங்க தாம் சரியானவர் என்பதை கில் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement