இங்கிலாந்து அணிக்கு எதிராக எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த போட்டியின் கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணியின் இன்னும் வெற்றிக்கு 536 ரன்கள் தேவை என்பதால் இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது. ஏனெனில் இன்றைய ஆட்டத்தில் எஞ்சியுள்ள ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நிகழ்த்திய சாதனை :
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 587 ரன்களை குவித்த இந்திய அணியானது இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட்டுகளை இழந்து 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இப்படி இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அடித்த ரன்களின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சரித்திர சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 587 ரன்களை குவித்த இந்திய அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்களை அடித்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 1014 ரன்கள் அடித்துள்ளது. இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 1000 ரன்களுக்கு மேல் ஒரு போட்டியில் அடிப்பது இதுவே முதல்முறை.
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆறு முறை மட்டுமே 1000 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 1121 ரன்கள் குவித்திருந்தது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ள இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் 1014 ரன்கள் குவித்துள்ளது.
இதையும் படிங்க : 430 ரன்ஸ்.. பிரைன் லாரா, சங்ககாராவை முந்திய கில்.. 2 சரித்திர சாதனையுடன்.. யாரும் செய்யாத உலக சாதனை
இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸ்சின் போது 269 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களையும் குவித்து எண்ணற்ற பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



