430 ரன்ஸ்.. பிரைன் லாரா, சங்ககாராவை முந்திய கில்.. 2 சரித்திர சாதனையுடன்.. யாரும் செய்யாத உலக சாதனை

Shubman Gill 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. ஆனால் அதற்கும் சேர்த்து பர்மிங்காம் நகரில் நடைபெறும் 2வது இங்கிலாந்தை புரட்டி எடுத்த இந்தியா 608 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஜூலை இரண்டாம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 587 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்தை 407 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 180 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 184*, ஹாரி ப்ரூக் 158 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

சுப்மன் கில் உலக சாதனை:

இந்திய அணிக்கு முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்ததாக விளையாடிய இந்தியா 427/6 ரன்கள் குவித்தது தங்களுடைய ஆட்டத்தை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் மீண்டும் சதத்தை அடித்து 161, ரிஷப் பண்ட் 65, ஜடேஜா 69*, ராகுல் 55 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங் 2, சோயப் பசீர் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இறுதியில் 608 என்ற இமாலய இலக்கை இங்கிலாந்து துரத்தி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களை அடித்த இந்திய கேப்டன் கில் 2வது இன்னிங்ஸில் 161 ரன்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமும், 150+ ரன்களும் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை கில் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

லாரா, சங்ககாராவை முந்தி:

இதற்கு முன் வேறு யாருமே ஒரே போட்டியில் இரட்டை சதமும், 150+ ரன்களும் அடித்ததில்லை. அது போக இப்போட்டியில் மொத்தமாக சுப்மன் கில் 430 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 400+ ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 608 ரன்ஸ்.. முடிஞ்சா இப்போ பஸ்பாலை காட்டுங்க.. இங்கிலாந்துக்கு உலக சாதனை இலக்கை சவாலாக விட்ட இந்தியா

அத்துடன் இலங்கையின் குமார் சங்ககாராவை முந்திய கில் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் (430) குவித்த ஆசிய வீரர் என்ற சரித்திர சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் குமார் சங்ககாரா 424 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அத்துடன் ஒரு டெஸ்ட் போட்டியில் 2வது அதிக ரன்களை குவித்த வீரர் என்ற உலக சாதனையையும் கில் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. கிரகாம் கூச் (இங்கிலாந்து): 456 (333, 123), இந்தியாவுக்கு எதிராக
2. சுப்மன் கில் (இந்தியா): 430 (269, 161), இங்கிலாந்துக்கு எதிராக
3. மார்க் டெய்லர் (ஆஸ்திரேலியா): 426 (334*, 92), பாகிஸ்தானுக்கு எதிராக
4. குமார் சங்ககாரா (இலங்கை): 424 (319, 105) வங்கதேசத்துக்கு எதிராக
5. பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்): 400*, இங்கிலாந்துக்கு எதிராக

Advertisement