விராட் கோலியின் 4 ஆம் இடத்தில் விளையாட ஒப்புக்கொண்டதற்கு காரணம் இதுதான் – சுப்மன் கில் விளக்கம்

Gill and Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்படி அவர் ஓய்வை அறிவித்ததில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் அந்த நான்காவது இடத்தில் விளையாடப்போகும் யார்? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் நிலவி வந்தது. அதோடு அந்த நான்காவது இடத்தில் விளையாட தகுதியான வீரர் யார்? என்றும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

விராட் கோலியின் இடத்தில் நான் விளையாட இதுவே காரணம் : சுப்மன் கில்

இந்நிலையில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் விராட் கோலியின் நான்காவது இடத்தில் நான் தான் பேட்டிங் செய்ய இருக்கிறேன் என்பதை பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்தார். மேலும் இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணியில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகிய பெரிய வீரர்கள் வெளியேறியதால் எங்களுக்கு எந்த ஒரு அழுத்தமும் இல்லை. நிச்சயம் இளம் வீரர்களைக் கொண்ட எங்களது அணியால் சாதிக்க முடியும். தனிப்பட்ட முறையில் நான் விராட் கோலியின் நான்காவது இடத்தில் களமிறங்க காரணம் யாதெனில் :

விராட் கோலி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த பின்னர் கௌதம் கம்பீரும் நானும் ஒரு பெரிய ஆலோசனையில் ஈடுபட்டோம். அப்போது அணியின் பயிற்சியாளரான கம்பீர் என்னை நான்காவது இடத்தில் விளையாட வைக்க விரும்புவதாக தெரிவித்தார். நானும் அந்த இடத்தில் சவுகரியமாக விளையாட முடியும் என்பதனாலே விராட் கோலியின் இடத்தில் விளையாட ஒப்புக்கொண்டேன்.

- Advertisement -

எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரில் எங்களது அணியின் சூழல் சிறப்பாக அமைந்து இந்த தொடரை நாங்கள் வெற்றிகரமாக கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடரையும் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு கிடைக்கும். எனவே இந்த இங்கிலாந்து தொடரை மிகச் சிறப்பாகவும், கவனமாகவும் எதிர்கொள்ள காத்திருக்கிறோம் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அவங்க 2 பேர் இல்லனாலும் இந்தியா இந்த விடயத்தில் ஸ்ட்ராங் தான் – இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பேட்டி

இந்திய அணிக்காக 98 டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடியுள்ள விராட் கோலி 50 ரன்கள் சராசரியுடனும் 26 சதங்களுடனும் 7564 ரன்கள் குவித்துள்ளார். அவரது இந்த இடம் இந்திய அணிக்கு பல ஆண்டுகளாகவே பல வெற்றிகளை தேடித்தந்த வேளையில் அந்த சவாலான பேட்டிங் ஆர்டரில் சுப்மன் கில் களமிறங்க இருப்பது அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement