இங்கிலாந்து மண்ணில் நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தற்போது சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளது. ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் நகரில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் வலுவானது : பிரைடன் கார்ஸ்
இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பதற்கு முன்னதாக கடந்த மாதம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தனர்.
இதன் காரணமாக தற்போது இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் விளையாட இருப்பதால் கடும் சவாலை இந்திய அணி எதிர்கொள்ளும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரைடன் கார்ஸ் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இல்லை என்றாலும் இந்திய அணி பலமாக இருப்பதாகவே தெரிவித்துள்ளார். தற்போதைய இங்கிலாந்து அணியில் இடம்பிடித்து இந்த தொடரில் விளையாடயுள்ள அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியதாவது :
இந்திய அணியில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் வெளியேறியது அந்த அணிக்கு நிச்சயம் மிகப்பெரிய இழப்புதான். அவர்கள் இருவருமே பல ஆண்டு அனுபவம் கொண்ட உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். ஆனால் அவர்கள் இருவரும் இல்லாதபோதும் இந்திய அணி தற்போது சிறப்பாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்போதைய இந்திய அணியின் இளம் வீரர்கள் மிகத் திறமை வாய்ந்த வீரர்களாக இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : சச்சின், தோனி, விராட், ரோஹித் முடிஞ்ச கதை.. இந்திய அணியால் இதை செய்ய முடியும்ன்னு பாருங்க.. கபில் தேவ்
எனவே அவர்களது பேட்டிங் ஆழமும் சிறப்பாகவே இருக்கிறது. இந்த இரண்டு பெரிய வீரர்கள் இல்லாமலும் தற்போதுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவன் மிக வலுவான ஒன்றாகவே இருக்கிறது. ஆனாலும் நாங்கள் அந்த சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என பிரைடன் கார்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.



