இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக நேற்று வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 84, ஹென்றி நிகோலஸ் 62, டேவோன் கான்வே 56 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.
அடுத்து விளையாடிய இந்தியா போராடி 40 ஓவரில் 306/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 93, ஸ்ரேயாஸ் ஐயர் 49, கேப்டன் கில் 56 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினர். அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா புத்தாண்டை வெற்றிகரமாகத் துவங்கியுள்ளது.
எளிதாக்கிய கிங் கோலி:
மறுபுறம் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கைல் ஜமிசன் 4 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இந்தப் போட்டியின் பிட்ச்சில் புதிய பேட்ஸ்மேன்கள் செட்டிலாகும் வரை பேட்டிங் செய்வது கடினமாக இருந்ததாக இந்திய கேப்டன் கில் தெரிவித்துள்ளார். ஆனால் அதையும் தன்னுடைய அனுபவத்தால் எளிதாக செய்த விராட் கோலி இந்தியாவின் வெற்றியை எளிதாக்கியதாக அவர் பாராட்டியுள்ளார்.
மேலும் 2027 உலகக் கோப்பைக்கு முன் குறைவான போட்டிகளில் இருப்பதால் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பளித்து சரியானவர்களை கண்டறிந்து தரமான அணியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி கில் பேசியது பின்வருமாறு. “இது போன்ற சேசிங்கில் பங்காற்றுவது எனக்கு நல்ல உணர்வைக் கொடுக்கிறது. நிகழ்காலத்தில் இருப்பது மிகவும் முக்கியம்”
2027 உ.கோ அணி:
“ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் உங்களுடைய முன்னே இருக்கும் சவாலில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட சூழ்நிலைக்கு என்ன தேவைப்படுகிறது என்பதற்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும். அதுவே உங்களுடைய சிறந்த மற்றும் ஏமாற்ற தருணங்களை சமமாக கையாள உதவும். அதையே நானும் செய்ய முயற்சிக்கிறேன். தற்சமயத்தில் விராட் கோலி பந்தை அடிக்கும் விதம் விஷயங்களை எளிதாக்குகிறது”
இதையும் படிங்க: 650 சிக்ஸ்.. கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா.. புதிய 2 சாதனை
“துவங்குவதற்கு எளிதாக இல்லாத பிட்ச்சில் கூட அவர் ஆட்டத்தை எளிதாக்கினார். அர்ஷ்தீப் கடந்த தொடரில் நன்றாக விளையாடினார். அந்தத் தொடரில் விளையாடாத முகமது சிராஜுக்கு இத்தொடரில் வாய்ப்பு கொடுக்கிறோம். இவை அனைத்தும் உலகக்கோப்பை அணியை கட்டமைப்பதற்கு அனைவருக்கும் வாய்ப்பளிப்பதைப் பற்றியதாகும். குறிப்பாக எங்களுக்கு அதிக போட்டிகள் இல்லை” என்று கூறினா.



