650 சிக்ஸ்.. கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா.. புதிய 2 சாதனை

Rohit Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. வதோதராவில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 84, ஹென்றி நிகோலஸ் 62, டேவோன் கான்வே 56 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அடுத்து விளையாடிய இந்திய அணி 49 ஓவரில் 306/6 ரன்களை எடுத்து வெற்றி பெற்று புத்தாண்டை வெற்றிகரமாக துவங்கியது.

- Advertisement -

இந்தியா வெற்றி:

அதிகபட்சமாக விராட் கோலி 93, ஸ்ரேயாஸ் ஐயர் 49, கேப்டன் சுப்மன் கில் 56 ரன்கள் குவித்து அசத்தினார்கள். இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். மறுபுறம் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கெய்ல் ஜெமிசன் 4 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

முன்னதாக இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 3 பௌண்டரி 2 சிக்ஸர்களை பறக்க விட்டு 26 (29) ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்து அவுட்டானார். இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக மட்டும் ரோஹித் சர்மா 329* சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

- Advertisement -

ஹிட்மேன் ரோஹித் சாதனை:

இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக 328 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் 650 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரோஹித் சர்மா: 650*
2. கிறிஸ் கெய்ல்: 553
3. ஷாஹித் அப்ரிடி: 476

இதையும் படிங்க: தோனி மாதிரியே எனக்கும் ரசிகர்கள் இப்படி செய்றது பிடிக்கல.. இந்தியா ஜெய்க்க இதான் காரணம்.. கோலி பேட்டி

இப்படி சாதனைகள் படைத்து வரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இப்போட்டியின் இடைவெளியில் பரோடா வாரியம் சார்பில் கௌரவ விழா நடத்தப்பட்டது. அதில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா மற்றும் பரோடா வாரிய நிர்வாகிகள் கலந்து கொண்டு அவர்களை கௌரவித்தனர். இதைத் தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement