- Advertisement -
ஐ.பி.எல்

அவங்க குருட்டுத்தனமா அடிக்கல.. டெல்லியை சாய்த்து குஜராத் டேபிள் டாப்பராக இதான் காரணம்.. கில் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 35வது போட்டியில் குஜராத் அணி டெல்லியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஏப்ரல் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி 204 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 31, கேஎல் ராகுல் 28, கேப்டன் 39, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 31, அசுட்டோஸ் சர்மா 37 ரன்கள் எடுத்தனர்.

அதைத் துரத்திய குஜராத் 19.2 ஓவரிலேயே 204/3 ரன்களை எடுத்து தங்களுடைய ஐந்தாவது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் டெல்லியை முந்தி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் கிஷோர் 36 ரன்கள் எடுத்தார். மிடில் ஆடரில் 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோஸ் பட்லர் சதத்தை நழுவ விட்டாலும் 97*, ரூத்தர்போர்ட் 43 ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

குஜராத் வெற்றி:

மறுபுறம் டெல்லி தங்களுடைய இரண்டாவது தோல்வியைப் பதிவு செய்தது. இந்நிலையில் இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் 230 ரன்கள் அடிப்பதற்கான நல்ல துவக்கத்தைப் பெற்ற டெல்லியை சிறப்பாக பவுலிங் செய்து 203க்கு கட்டுப்படுத்தியதே வெற்றிக்கு காரணம் என்று குஜராத் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அதே போல பேட்டிங்கில் பட்லர் – ரூதர்போர்ட் குருட்டுத்தனமாக அடிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மாறாக மிகவும் நேர்த்தியாக விளையாடிய அவர்களால் கிடைத்த இந்த வெற்றியை பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கும் கில் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒரு கட்டத்தில் டெல்லி 220 – 230 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்வது போல் தெரிந்தது. அப்போது நாங்கள் மீண்டும் போட்டியை இழுத்துக் கொண்டு வந்ததற்கான பாராட்டுக்கள் எங்களுடைய பவுலர்களை சேரும்”

- Advertisement -

கில் மகிழ்ச்சி:

“முதல் போட்டியிலும் கிட்டத்தட்ட 245 ரன்களை துரத்திய நாங்கள் 10 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றோம். அந்த வகையில் நன்றாக சேசிங் செய்யும் நாங்கள் பாதுகாப்பாக விளையாடுகிறோம். அவர்கள் முன்னோக்கி சென்ற போது அக்சர் பட்டேல் பேட்டிங் செய்த சமயத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை அடிப்பது கடினமாக இருந்தது”

இதையும் படிங்க: 2009 ஜெயசூர்யா, 2010 ரோஹித்துக்கு பின்.. குஜராத்தின் தமிழக வீரர் சாய் கிஷோர் தனித்துவமான சாதனை

“எனவே அதை மாற்றாமல் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்று நினைத்தோம். பேட்டிங்கில் நான் ரன் அவுட்டானாலும் இன்னும் நிறைய போட்டிகள் இருப்பதால் எனக்கு வாய்ப்பு கிடைக்கும். பட்லர் – ரூதர்போர்ட் ஸ்ட்ரைக்கை மாற்றி அடித்து ஆடிய விதம் அற்புதமாக இருந்தது. அது குருட்டுத்தனமான ஹிட்டிங் கிடையாது. சூழ்நிலையை கணக்கிட்டு அவர்கள் மிகவும் நேர்த்தியாக பேட்டிங் செய்ததைப் பார்த்தது விருந்தாக அமைந்தது. இந்த வெற்றியால் மகிழ்ச்சி” என்று கூறினார்.

- Advertisement -