
இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அந்தளவுக்கு அப்போட்டியில் வெஸ்ட் அணி இந்தியாவுக்கு துளியளவு கூட சவாலைக் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.
அதற்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததே முக்கிய காரணம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார். அதே போல குறைந்த சம்பளத்தை கொடுக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதற்கு தங்களுடைய வீரர்கள் யோசிப்பதாக பயிற்சியாளர் டேரன் சமி தெரிவித்தார். அந்தளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிஸ்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எந்த வகையான கிரிக்கெட்டுக்கும் டெஸ்ட் போட்டிகள் தான் ஆணிவேர் என்று இந்திய கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தினால் ஒருநாள், டி20 போட்டிகளில் தாமாக அசத்தக்கூடிய தாமாக திறமை வந்து விடும் என்று அவர் கூறியுள்ளார். மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் பணத்துக்காக டி20 கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதே டெஸ்ட் போட்டிகளில் தடுமாற காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கணித்துள்ளார்.
இது பற்றி 2வது போட்டிக்கு முன் கில் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் அணிகளை 2 தரமாக பிரிப்பது ஐசிசி எடுக்க வேண்டிய முடிவு. நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் வலுவான அடிப்படையை வைத்திருந்தால் தாமாகவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அசத்துவீர்கள் என்று நான் கருதுகிறேன். எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளை பாருங்கள்”
“உங்களுடைய டெஸ்ட் அணி நன்றாக இருந்தால் ஒருநாள், டி20 கிரிக்கெட்டிலும் உங்கள் அணி இயற்கையாக நன்றாக செயல்படும். அப்படிப்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் அதிகம் கவனம் செலுத்துவது அவர்களுடைய சரிவுக்கு காரணமாக இருக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. நீங்கள் கிரிக்கெட்டை எங்கு துவங்கினீர்களோ அங்கு உங்களுடைய அடித்தளம் வலுவாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்”
இதையும் படிங்க: சாய் சுதர்சனை நான் நம்புறேன்.. இந்தியாவுக்காக நீண்ட காலம் இதை செய்வாரு.. கேப்டன் கில் ஆதரவு
“அதை மறக்கும் போது எந்த ஒரு நாட்டுக்கும் தடுமாற்றம் ஏற்படும். எனவே நாங்கள் விழிப்புணர்வோடு இருக்கிறோம். நீங்கள் டெஸ்ட் ஃபார்மெட்டில் சிறப்பாக விளையாடினால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அசத்துவதற்குத் தேவையான அணியை இயற்கையாகவே பெறுவீர்கள். உங்களுடைய அடித்தளம் நன்றாக இருந்தால் உங்களுக்கு நல்ல ஆப்ஷன்கள் கிடைக்கும்” என்று கூறினார்.